»   »  திரைத் துளி

திரைத் துளி

Subscribe to Oneindia Tamil

படப்பிடிப்புத் தளத்தில் ஏற்பட்ட தீ விபத்திலிருந்து நடிகை ஸ்னேகா அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

பிரசாந்த், ஸ்னேகா நடிக்கும் ஆயுதம் என்ற படத்தின் படப்பிடிப்பு சென்னை எண்ணூ<ர் அருகே நடந்து கொண்டிருந்தது.அப்போது கீழே பற்றி எரியும் தீக்கு மேலே பிரசாந்த் கயிற்றில் தொங்குவது போன்ற காட்சி படமாக்கப்பட்டது.

இந்தக் காட்சி படமாக்கப்பட்டபோது கேஸ் சிலிண்டர்கள், குழாய்கள் ஆகியவை அங்கிருந்தன.

அவற்றின் அருகில் ஸ்னேகா நின்று கொண்டிருந்தார். அப்போது கேஸ் சென்று கொண்டிருந்த குழாயில் திடீரென தீப் பிடித்துக்கொண்டது. அருகில் இருந்த ஸ்னேகாவின் சேலையிலும் தீ பரவியது.

செய்வதறியாமல் ஸ்னேகா அலறியத் துடித்தார்.

அதிர்ச்சி அடைந்த படக்குழுவினர் உடனடியாக செயல்பட்டு ஸ்னேகாவின் சேலையில் பற்றிய தீயை அணைத்தனர்.

பெரும் அதிர்ச்சி இருந்த ஸ்னேகாவை அனைவரும் ஆறுதல்படுத்தி வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். சூட்டிங் அத்தோடு முடித்துக்கொள்ளப்பட்டது.

கடவுள் அருளால் தான் உயிர் தப்பியதாக பின்னர் ஸ்னேகா தெரிவித்தார்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil