இவனுங்களை எல்லாம் வெறிநாயை விட்டு கடுச்சு குதற வைக்கணும்: குஷ்பு கொந்தளிப்பு
சென்னை: கடவுளின் பெயரால் வாழும் இவரை போன்றவர்களை வெறி நாய்களை விட்டு கடித்துக் குதற வைக்க வேண்டும் என்று குஷ்பு குமுறியுள்ளார்.
டெல்லி அருகே உள்ள காசியாபாத்தில் இருக்கும் மதரசாவில் வைத்து 10 வயது சிறுமியை 17 வயது சிறுவன் பாலியல் பலாத்காரம் செய்தான். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் சிறுவனை கைது செய்தனர்.

பின்னர் அந்த மதரசாவில் பணியாற்றும் மவுலவியையும் கைது செய்து விசாரித்து வருகிறார்கள். சிறுவன் செய்த செயல் குறித்து அறிந்தும் மவுலவி அதை போலீசாருக்கு தெரிவிக்கவில்லை என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இது குறித்த செய்தியை படித்த நடிகையும், காங்கிரஸ் செய்தித் தொடர்பாளருமான குஷ்பு ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
கடவுளின் பெயரால் வாழும் இவரை போன்றவர்களை வெறி நாய்களை விட்டு கடித்துக் குதற வைக்க வேண்டும். அவர்களுக்கு எல்லாம் வாழ உரிமையே இல்லை என்று பொங்கி எழுந்துள்ளர்.


Click it and Unblock the Notifications











