For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  இதுக்கு மேல கேவலப்படுத்த முடியாது.. தரமான சம்பவம்.. பிக் பாஸ் நிகழ்ச்சியை இப்படி ஓட்டுறாங்களே!

  |

  சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சி ஆரம்பம் ஆனாலே மீம் க்ரியேட்டர்களும், ட்ரோல் செய்யும் நெட்டிசன்களுக்கும் ஒரே கொண்டாட்டம் தான்.

  இந்நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்கள் குறித்த "டே தகப்பா" மீம் வேற லெவலில் டிரெண்டாகி வருகிறது.

  நெட்டிசன்கள் தரமான சம்பவம் என அந்த மீமை தீயாயக பரப்பி வருகின்றனர்.

  சென்னையை மிரட்டும் பேனர்கள்.. தியேட்டர் ரிலீஸ் போன்றே களைக்கட்டும் க/பெ ரணசிங்கம் புரமோஷன்ஸ்!

  ரொம்ப வீக்

  ரொம்ப வீக்

  இதுவரை இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு பிக் பாஸ் போட்டியாளர்கள் ரொம்ப வீக்காக உள்ளனர் என்கின்ற குற்றச்சாட்டு பிக் பாஸ் ரசிகர்கள் மத்தியில் அதிகமாகவே எழுந்துள்ளன. இளம் நடிகைகள் இல்லை என்றும், வலுவான போட்டியாளர்கள் மற்றும் ஹாட் ஹீரோக்கள் இல்லை என்ற குற்றச்சாட்டுக்களையும் ரசிகர்கள் முன் வைக்கின்றனர்.

  போர் அடிக்கும் போலயே

  போர் அடிக்கும் போலயே

  மேலும், பிக் பாஸ் நிகழ்ச்சியின் 4வது சீசன் வழக்கத்தை போல இல்லாமல் ரொம்பவே போரடிக்கும் போலயே என்ற கமெண்ட்டுகளும் குவிந்து வருகின்றன. நடிகைகள் ஷிவானி மற்றும் ரம்யா பாண்டியனைத் தான் மலை போல நம்பி இருப்பதாகவும் சில ஜொள்ளு ரசிகர்கள் சொல்லி வருகின்றனர்.

  வொர்த் இல்ல

  வொர்த் இல்ல

  பிக் பாஸ் போட்டியாளர்கள் இவர்கள் தான் என்கிற லிஸ்ட் ஒன்று வைரலாகி வருகிறது. அதில், ரேகா, விஜே அர்ச்சனா, அனிதா சம்பத், ஷிவானி நாராயணன், ரம்யா பாண்டியன், கேப்ரில்லா, அறந்தாங்கி நிஷா உள்ளிட்ட பெண் போட்டியாளர்களும், ரியோ ராஜ், நடிகர் ஆரி, அனு மோகன், ஆஜித் உள்ளிட்ட ஆண் போட்டியாளர்கள் பெயர்களும் இடம்பெற்றுள்ளன. இந்த பட்டியலை பார்த்த மீம் க்ரியேட்டர்கள், ஹானஸ்ட்டா சொல்றேன் வொர்த் இல்ல என வனிதாவின் போட்டோ போட்டு போட்ட மீம் சமீபத்தில் வைரலானது.

  இதுக்கு மேல கேவலப்படுத்த முடியாது

  இதுக்கு மேல கேவலப்படுத்த முடியாது

  இந்நிலையில், தற்போது விஜய் டிவி பிரபலங்களையே வைத்து இப்போ நீங்க பிக் பாஸ் நிகழ்ச்சி நடத்தலன்னு யாரு அழுதா என்கிற ரேஞ்சில் கவுண்டமணி, செந்தில் "டே தகப்பா" மீம் ஒன்று செமையா வைரலாகி வருகிறது. அதை பார்க்கும் பிக் பாஸ் ரசிகர்களும், நாங்களும் அதையேத் தான் ஃபீல் பண்ணுகிறோம் என கமெண்ட் அடித்து வருகின்றனர்.

  விஜய் டிவி பிரபலங்கள்

  விஜய் டிவி பிரபலங்கள்

  ரியோ ராஜ், ஷிவானி நாராயணன், ரம்யா பாண்டியன், சூப்பர் சிங்கர் ஆஜித், அறந்தாங்கி நிஷா என போட்டியாளர்கள் பட்டியலில் இருக்கும் பெரும்பாலான பெயர்கள் விஜய் டிவி பிரபலங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களை வைத்துக் கொண்டு ரியாலிட்டி ஷோ நடத்துவது முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் கதை தான் என்கின்றனர்.

  Bigg Boss -ல் கலந்துகொண்ட Kasthuriகு Vijay Tv நாமம் | Bigg Boss Tamil
  யார் வருவா

  யார் வருவா

  மேலும், பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்த நெகட்டிவ்வான விஷயங்கள் சர்ச்சைகள் தொடர்ந்து வருவதால், வெளியாட்கள் யாரும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வர மாட்டார்கள் என்றும் ஏகப்பட்ட கமெண்ட்டுகள் குவிந்து வருகின்றன. ஒரு வருடம் ஆகியும் விஜய் டிவி சம்பளமே தரவில்லை என கஸ்தூரி போட்ட ட்வீட், யாரு வீட்டு டாய்லட்டையும் நான் கழுவ மாட்டேன் என லக்‌ஷ்மி மேனன் போட்ட போஸ்ட் எல்லாம் மைண்ட்ல வந்து போகுமா? இல்லையா?

  English summary
  This season Bigg Boss Tamil contains more number of Vijay Tv celebrities only meme goes viral in social media. Many of the Bigg Boss fans also get upset about the participants list.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X