»   »  இதுதானா டி ராஜேந்தரின் மேடை நாகரீகம்?

இதுதானா டி ராஜேந்தரின் மேடை நாகரீகம்?

Posted By:
Subscribe to Oneindia Tamil

விழித்திரு பட புரமோஷன் நிகழ்ச்சிக்கு வந்த நடிகை தன்ஷிகாவை மேடையில் வைத்தே அவமானப்படுத்திய டி ராஜேந்தருக்கு ஏகத்துக்கும் கண்டனக் கணைகள். சமூக வலைத் தளங்களில் விட்டு வெளுத்துக் கொண்டிருக்கிறார்கள். டி ராஜேந்தர் எந்த அளவுக்கு தற்புகழ் பித்தர் என்பதை அந்த விழித்திரு புரமோஷன் நிகழ்ச்சி காட்டிவிட்டது என எழுதி வருகின்றனர்.

இன்றைக்கு ஒரு படத்தின் விளம்பர நிகழ்ச்சிகளுக்கு அதன் நாயகி மட்டும் வருவதே இல்லை. யாரோ ஓரிரு ஹீரோயின்கள்தான் வந்து போகிறார்கள்.

Social Media blasting T Rajesndar for his worst behaviour

ஆனால் விழித்திரு படத்தின் புரமோஷனுக்கு அதன் நாயகி தன்ஷிகா வந்திருந்தார். அவரைப் பேசச் சொன்னபோது படத்தைப் பற்றி மட்டும் பேசிவிட்டு அமர்ந்தார்.

அடுத்து மைக் பிடித்த ராஜேந்தர், அதெப்படி என் பெயரையெல்லாம் சொல்ல மறந்தாய்... நீ கபாலியில் சூப்பர் ஸ்டாருடன் நடித்ததால் வந்த மமதை இது... அந்த அண்ணாமலையுடன் நடிச்சா, இந்த டிஆரெல்லாம் கண்ணுக்குத் தெரியாதா? என்றெல்லாம் ஒருமையிலேயே பேச... இல்லை, திட்ட ஆரம்பித்தார்.

உடனே தன்ஷிகா எழுந்து அப்படியெல்லாம் இல்லை என்றார். உங்கள் மீது நான் பெரிய மதிப்பு வைத்திருக்கிறேன் என்றார். உடனே ராஜேந்தர், அந்த மதிப்பை வச்சு நான் என்ன வாங்க முடியும்? யாருக்கு வேண்டும் உன்னுடைய மதிப்பு என்றார். இருந்தும் ராஜேந்தரின் காலைத் தொட்டு கும்பிடப் போனார் தன்ஷிகா. அப்போதும் அடங்கவில்லை அவர். 'நீ கட்டவில்லை ஸேரி... யாருக்கு வேணும் உன்னுடைய ஸாரி' என கிட்டத்தட்ட ஈவ் டீசிங் லெவலுக்கே போய்விட்டார்.

முதலில் மேடை நாகரீகம் என்றால் என்னன்னு தெரிஞ்சுக்க... உனக்கு மேடை நாகரீகம் தெரியல.. என்றெல்லாம் பாடமெடுக்க ஆரம்பித்தார்.

இதுகுறித்து பத்திரிகையாளர் கவின் மலர் தன் பேஸ்புக் பக்கத்தில் இப்படி எழுதியுள்ளார்:

"உங்க பெயரை எதற்கு தன்ஷிகா சொல்லணும் டி.ராஜேந்தர் அவர்களே? 'விழித்திரு' படத்தில் ஒரு பாட்டுக்கு ஆடியதைத் தவிர உங்கள் பங்கு ஒன்றுமில்லை. நான் படம் பார்த்துவிட்டேன். உங்கள் நினைவு அவருக்கு வராமல் போனது இயல்புதான். இதற்குக் கொஞ்சம் கூட நாகரிகம் இல்லாத உடல்மொழியோடும், வாய்மொழியோடும் நீங்கள் பேசிய பேச்சு அருவருப்பின் உச்சம். தன்ஷிகா பணிவோடு சீனியர் என்கிற மரியாதையோடு பேசுகிறார். ஒருமுறை கிட்டத்தட்ட குனிந்து கால்களைத் தொட்டு கேட்பதுபோல் மன்னிப்பு கேட்கிறார். ஆனால் திமிர் உங்களுக்கு அடங்கவில்லை. 'சாரி கட்டிக்கொண்டு வராமல் ஸாரி கேட்கிறாய்' என்று சொல்கிறீர்கள். உங்க அடுக்குமொழியில் தீய வைக்க... அவங்க என்ன உடையில் வந்தால் உங்களுக்கு என்ன?
கேட்டு வாங்குவதா மரியாதை..?

தன்ஷிகா கண்கலங்கும் அளவுக்கு தரந்தாழ்ந்து பேசுகிறீர்கள். இப்படி மேடைக்கு மேடை உளறிவருவதால் தான் உங்கள் மேலிருந்த மரியாதை மக்கள் மத்தியில் போனது. சக கலைஞரை மதிக்கத் தெரியாத, நாகரிகம் அற்ற உங்கள் பெயரை உச்சரிக்காத தன்ஷிகாவுக்கு வாழ்த்துகள்.
உங்களுக்குப் பின்னால் அந்தக் காணொளியில் சில முகங்கள் தெரிந்தன. அம்முகங்களின் சிரிப்பும் கைத்தட்டலும் உங்கள் பேச்சின் அருவருப்புக்கு சற்றும் சளைத்ததல்ல".

ராஜேந்தர் மாதிரி ஆட்களிடம் மாட்டிக் கொண்டு இந்த மேடை நாகரீகம் படற பாடு இருக்கே...!

English summary
The entire Social Media is blasting T Rajendar for his worst behaviour towords actress Dhanshika in Vizhithiru promo

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil