»   »  இதான் விஜய் 61 'கதை'யா? #Vijay61

இதான் விஜய் 61 'கதை'யா? #Vijay61

Posted By:
Subscribe to Oneindia Tamil

அட்லீ இயக்கத்தில் விஜய் நடிக்கும் புதிய படம் குறித்து பரபரப்பாக ஏதாவது ஒரு செய்தி வந்து கொண்டே இருக்கிறது.

முதல் முறையாக இந்தப் படத்தில் தாடி, முறுக்கு மீசை என புதிய கெட்டப்புக்கு மாறியிருக்கிறார் விஜய். இந்தப் படத்தில் எஸ்ஜே சூர்யா ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இருவரும் இணைந்துள்ள புகைப்படங்கள் அண்மையில் இணைய தளங்களில் வெளியாகின.

Social media's 'story' on Vijay 61

அதை வைத்தே ஒரு கதையை உருவாக்கிவிட்டனர் வலைவாசிகள். அதில் முத்துசிவா என்பவர் எழுதியுள்ள 'கதை' இது.

அந்தக் கதைதான் இது:

"ஏழைத் தொளிலாளர்களின் உரிமைக்காகப் போராடும் விஜய்யை நய வஞ்சகாமாக பேசிப் பழகி கொலை செய்கிறார் பிஸினஸ்மேன் எஸ்.ஜே. சூர்யா... மனைவி நித்யா மேனனையும் துடிதுடிக்கக் கொல்கிறார். விஜய் மகன் மட்டும் எப்படியோ தப்பித்து விடுகிறார்.

மகன் விஜய் வளர்ந்த பிறகு இந்த ஃப்ளாஷ்பேக்கை சொல்வதற்காகவே உயிரோடு இருக்கும் அந்த வயதானக் கிழவன் மூலமாக நடந்ததை அறிந்து, எஸ்.ஜே. சூர்யாவைக் கொன்று, கொலை பண்ணி, சூசைட் பண்ணிக்க வச்சி மர்டர் பண்றதுதான் படத்தோட கதையாக இருக்க வேண்டும். இருக்கும்".

-இதைப் படித்த சிலர், அட வில்லு கதையும் இதானே என்று கமெண்ட் அடிக்க, இன்னும் சிலர், அபூர்வ சகோதரர்கள், ஒரு கைதியின் டைரி, எமன், ஆதி (விஜய் நடித்ததுதான்) என எடுத்துக் கொடுத்திருக்கிறார்கள்.

அட்லீ... நம்மாளுங்க ஞாபக சக்தியில் கில்லாடிங்க. பாத்து சூதானமா படம் புடிங்க!

English summary
Here is a story created by social media users for Vijay's 61st movie.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil