»   »  ஹலோ டூட்ஸ்... காமெடி ‘எலி’யைப் பாலோ பண்ணுங்க... பிரசர், சுகரைக் குறைங்க... : வடிவேலு ஐடியா

ஹலோ டூட்ஸ்... காமெடி ‘எலி’யைப் பாலோ பண்ணுங்க... பிரசர், சுகரைக் குறைங்க... : வடிவேலு ஐடியா

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தனது எலி படத்திற்காக தனியே பேஸ்புக், டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் தனிப்பக்கம் தொடங்கியுள்ளார் நடிகர் வடிவேலு. இதற்கென தனியே ஒரு குழுவையும் அவர் நியமித்துள்ளார்.

இயக்குநர் யுவராஜ் இயக்கத்தில் வடிவேலு கதாநாயகனாக நடித்து வரும் புதிய படம் ‘எலி'. இவர் ஏற்கனவே வடிவேலுவின் தெனாலிராமன் படத்தை இயக்கியவர். இப்படத்தில் வடிவேலுக்கு ஜோடியாக சதா நடித்துள்ளார்.

இந்நிலையில், இந்த படத்திற்காக சமூக வலைத்தளங்களான பேஸ்புக் மற்றும் டுவிட்டரில் தனியாக வலைப்பக்கம் தொடங்கப்பட்டுள்ளது. இதனை தொடங்கி வைத்த வடிவேலு விழாவில் பேசியதாவது :-

காமெடி எலி...

காமெடி எலி...

ஹலோ டூட்ஸ். நான் இப்ப நடிச்சிட்டு இருக்கிற படம் பேரு எலி. இந்த படத்துல காமெடில எலி டிராவல் பண்ணாத ரூட்டே கிடையாது.

லேகியம் விக்கலங்க...

லேகியம் விக்கலங்க...

மொத்தத்துல இது ஒரு காமெடி எலி, கலக்கல் எலி, உங்கள பூரா வயிறு குலுங்க சிரிக்க வைக்கப் போற உங்க வீட்டு எலி. நான் இப்படி ராகம் போட்டு பேசுனதுனால லேகியம் விக்கிறேன்னு நினைச்சுறாதீங்க.

மஸ்ட் வாட்ச் த ரேட்...

மஸ்ட் வாட்ச் த ரேட்...

உடனே போய் பேஸ்புக்லயும், டுவிட்டர்லயும், இந்த காமெடி எலிய பாலோவ் பண்ணி உடம்புல இருக்கிற பிரசரையும் சுகரையும் சரட்டு புரட்டுன்னு இறக்கிட்டு, கலகலன்னு குழந்தை குட்டியோட சிரிச்சு மகிழுங்கோ. மஸ்ட் வாட்ச் த ரேட்' என்றார்.

பிரம்மாண்டமாக...

பிரம்மாண்டமாக...

1960களின் பிண்ணனியில் பிரம்மாண்டமாக உருவாகும் இப்படத்தை சிட்டி சினி கிரியேஷன்ஸ் சார்பாக ஜி சதிஷ் குமார் தயாரிக்கிறார். கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி சென்னையில் தொடங்கிய இப்படத்தின் படபிடிப்பு இரவுபகலாக இடைவிடாமல் நடைபெற்று வருகிறது.

தோட்டாதரணி...

தோட்டாதரணி...

பின்னி மில் வளாகத்தில் அமைக்க பெற்ற நட்சத்திர வீடு, பழமையான வீடுகள், பிரமாண்டமான வீடுகளின் உள்கட்டமைப்புகள், வில்லனின் ரகசிய இருப்பிடம் என 15க்கும் மேற்ப்பட்ட பிரம்மாண்ட அரங்குகள் கோடிகணக்கில் கலை இயக்குனர் தோட்டாதரணியால் அமைக்கப்பட்டு, வசனகாட்சிகள் சண்டைக்காட்சிகள் படமாக்கப்பட்டன.

English summary
Actor Vadivelu has launched a social platform for his upcoming Eli movie.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil