“சொல்லுங்க… சொல்லுங்க… தளபதி விஜய்யை சந்திச்சது உண்மையா?”: துல்கர் சல்மானின் பதில் இதுதான்!

ஐதராபாத்: மலையாள லீடிங் ஸ்டார் துல்கர் சல்மானின் 'சீதா ராம' படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

ஹனு ராகவபுடி இயக்கத்தில் துல்கர் சல்மான், ராஷ்மிகா மந்தனா, மிருணாள் தாகூர், பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இந்நிலையில், விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற 'வாரிசு' படத்தின் சூட்டிங்கில் தளபதி விஜய்யுடனான சந்திப்பு குறித்த உண்மையை துல்கர் சல்மான் கூறியுள்ளார்.

எதிர்பார்ப்பை ஏற்படுத்திய சீதா ராமம்

எதிர்பார்ப்பை ஏற்படுத்திய சீதா ராமம்

மலையாளத்தில் முன்னணி நடிகரான துல்கர் சல்மான், அவ்வப்போது தமிழிலும் நல்ல படங்களில் நடித்து வருகிறார். தெலுங்கில் இதற்கு முன்னர் அவர் நடித்திருந்தாலும், 'சீதா ராமம்' படம் பெரியளவில் எதிர்பார்க்கப்பட்டது. ஹனு ராகவபுடி இயக்கியுள்ள இந்தப் படத்தில் துல்கர் சல்மான், ராஷ்மிகா மந்தனா, மிருணாள் தாகூர், பிரகாஷ் ராஜ், கெளதம் வாசுதேவ் மேனன் ஆகியோர் நடித்துள்ளனர்.

பாசிட்டிவான விமர்சனங்கள்

பாசிட்டிவான விமர்சனங்கள்

'சீதா ராமம்' படத்தின் ப்ரோமோஷன் நிகச்சியில், பான் இந்தியா ஸ்டார் பிரபாஸும் கலந்துகொண்டு, படகுழுவினரை ரொம்பவே பாராட்டியிருந்தார். இதனிடையே, மதம் சார்ந்த சென்ஸிட்டிவான விசயங்கள் அதிகம் இருப்பதால், அரபு நாடுகளும் தடைவிதித்தன. இந்நிலையில், இன்று ( ஆக. 5) திரையரங்குகளில் வெளியான 'சீதா ராமம்' படத்திற்கு நேர்மறையான விமர்சனங்கள் கிடைத்து வருகின்றன.

விசாகப்பட்டினத்தில் சூட்டிங்

விசாகப்பட்டினத்தில் சூட்டிங்

முன்னதாக 'சீதா ராமம்' படத்தின் சூட்டிங், விசாகப்பட்டினம், காஷ்மீர் உள்ளிட்ட பல பகுதிகளில் நடைபெற்றன. இதற்காக துல்கர் சல்மான் உள்ளிட்ட 'சீதா ராமம்' படக்குழுவினரும், எல்லா லொக்கேஷன்களுக்கும் விமானத்தில் பறந்தபடியே இருந்தனர். அதேபோல், விஜய்யின் 'வாரிசு' படத்தின் சூட்டிங்கும் விசாகப்பட்டினத்தில் நடைபெற்றது. அதிலும், விஜய்யின் 'வாரிசு', துல்கர் சல்மானின் 'சீதா ராமம்' படங்களின் சூட்டிங், விசாகப்பட்டினத்தில் ஒரே இடத்தில் நடந்ததாகக் கூறப்படுகிறது.

விஜய்யை சந்தித்த துல்கர் சல்மான்?

விஜய்யை சந்தித்த துல்கர் சல்மான்?

'சீதா ராமம்', 'வாரிசு' படங்களின் சூட்டிங் ஸ்பாட்டில், தளபதி விஜய்யை துல்கர் சல்மான் சந்தித்ததாக தகவல்கள் வெளியாகின. மேலும், இருவரும் சேர்ந்து ஒரு படத்தில் நடிக்கப் போகிறார்களா? அல்லது யதார்த்தமாக சந்தித்துக் கொண்டார்களாக? என்ற விவாதமும் ட்வீட்டரில் தூள் பறந்தன. இதுகுறித்து ரசிகர்களும் துல்கர் சல்மானிடம் தொடர்ந்து கேள்விகள் கேட்டே வந்தனர்.

விளக்கம் கொடுத்த துல்கர் சல்மான்

விளக்கம் கொடுத்த துல்கர் சல்மான்

விஜய் - துல்கர் சல்மான் சந்திப்பு குறித்த பேச்சுகள் தொடர்ந்து வெளியாகி கொண்டே இருந்ததால், துல்கர் சல்மான் இதற்கு விளக்கம் கொடுத்துள்ளார். "சீதா ராமம் சூட்டிங் விசாகப்பட்டினத்தில் நடந்தது உண்மை தான் என்றும், ஆனால், நான் விஜய்யை பார்க்கவில்லை, அவரை சந்தித்து எதுவும் பேசவில்லை" எனவும் உண்மையை அப்படியே சொல்லிவிட்டார். சீதா ராமம், வாரிசு என இந்த இரண்டு படங்களிலும், ராஷ்மிகா மந்தனா நடிப்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X