»   »  ஏழு வேடங்களில் நடிக்கும் 'சோலோ' நடிகை!

ஏழு வேடங்களில் நடிக்கும் 'சோலோ' நடிகை!

Posted By:
Subscribe to Oneindia Tamil

பெங்களுர் : 'லூசியா' படத்தின் மூலம் புகழ்பெற்றவர் பிரபல கன்னட நடிகை ஸ்ருதி ஹரிஹரன். ஸ்ருதி ஹரிகரன், தமிழில் 'நெருங்கி வா முத்தமிடாதே', 'நிபுணன்' ஆகிய படங்களில் நடித்திருக்கிறார். தற்போது 'ரா ரா ராஜசேகர்', துல்கர் சல்மானுடன் 'சோலோ' ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

ஸ்ருதி தற்போது கலாத்மிகா என்ற புதிய படத் தயாரிப்பு நிறுவனம் ஒன்றைத் தொடங்கியிருக்கிறார். இந்த நிறுவனத்தின் மூலம் அவர் 'டெஸ்லா' என்ற படத்தைத் தயாரிக்கிறார். சயின்டிஃபிக் த்ரில்லர் கதையாக உருவாகும் இந்தப் படத்தை வினோத் ராஜ் இயக்குகிறார்.

Solo actress in 7 roles

இந்தப் படத்தில் ஸ்ருதி ஹரிஹரன் ஏழு வேடங்களில் நடிக்கிறார். ஒவ்வொறு கேரக்டரும் வெவ்வேறு இயல்பைக் கொண்டிருக்குமாம். இந்த 7 வேடங்களின் தோற்றத்தையும் ஒன்றன் பின் ஒன்றாக வெளியிடத் திட்மிட்டிருக்கிறார் ஸ்ருதி.

'இது ஒரு பெண்ணை மையப்படுத்திய அறிவியல் சார்ந்த த்ரில்லர் படம். கன்னடத்தில் மட்டுமே தயாராகிறது. 7 வேடங்களில் நடிப்பதற்காக என்னை தயார்படுத்தி வருகிறேன். எனக்கு மட்டுமல்ல கன்னட சினிமா ரசிகர்களுக்கும் இந்தப் படம் புதிதாக இருக்கும்' எனக் கூறியிருக்கிறார் ஸ்ருதி ஹரிஹரன்.

English summary
The Kannada actress, Shruti Hariharan, is famous for 'Lucia' film. Shruti has started a film production company called Kalathmika. She is going to play seven roles in 'Tesla' which she will produce.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil