Just In
- 58 min ago
மிட் நைட்டில் ரசிகரின் வீட்டுக்கு சென்று திடீர் சர்ப்ரைஸ் கொடுத்த ஆரி.. தீயாய் பரவும் வீடியோ!
- 1 hr ago
மாலத்தீவில் இருந்து போட்டோ போட்ட வனிதா.. ஆபாசமாய் கேள்வி கேட்ட நெட்டிசன்ஸ்!
- 2 hrs ago
ஒரே மஜா தான் போல.. மாலத்தீவில் மல்லாக்கப் படுத்துக்கிட்டு போஸ் கொடுக்கும் பிக் பாஸ் பிரபலம்!
- 2 hrs ago
டைம் சரியில்லை.. பாண்ட் படமான 'நோ டைம் டு டை' ரிலீஸ் மீண்டும் தள்ளிவைப்பு.. ரசிகர்கள் ஏமாற்றம்!
Don't Miss!
- Automobiles
போக்குவரத்து விதி மீறலில் ஈடுபட்டால் வாகன காப்பீட்டு கட்டணம் அதிகரிக்கும்!
- News
கமல்ஹாசன் டிஸ்சார்ஜ் - வலது கால் அறுவை சிகிச்சை முடிந்து நலமுடன் வீடு திரும்பினார்
- Lifestyle
உங்க ராசியின் சின்னத்தோட உண்மையான அர்த்தம் என்னனு தெரியுமா? அது உங்கள பத்தி என்ன சொல்லுது தெரியுமா?
- Finance
மார்ச்-க்கு பின் வேற லெவல்.. உசைன் போல்ட் ஆக மாறும் இந்திய பொருளாதாரம்..!
- Education
முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு கல்லூரி எப்போது திறக்கப்படும்? அமைச்சர் விளக்கம்!!
- Sports
ப்ரீத்தி ஜிந்தாவிற்கு என்னாச்சு.. எதுக்கு இந்த தப்பான முடிவு.. ரசிகர்களுக்கு ஷாக் தந்த பஞ்சாப் அணி!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
டிக்கெட் டூ ஃபினாலே 7வது டாஸ்க்: பாலாவிடம் தோற்ற ஆரி.. கடைசி இடத்தில் ரம்யா.. வின்னர் இவர்தான்!
சென்னை: ஃபினாலே டிக்கெட்டுக்கான 7வது டாஸ்க்கில் பாலாஜியிடம் ஜஸ்ட்டில் தோற்றார் ஆரி.
பிக்பாஸ் நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் அடுத்த வாரம் ஃபினாலே வாரமாக இருக்க போகிறது.
பிக்பாஸ் வீட்டில் இதுதான் கடைசி வாரம் என்பதால் அனைத்து போட்டியாளர்களுமே எவிக்ஷன் புராசஸுக்கான நாமினேஷனில் இடம் பிடித்துள்ளனர்.

டிக்கெட் டூ ஃபினாலே
இந்நிலையில் நாமினேஷனில் இருந்து ஒரு போட்டியாளரை காப்பாற்றி ஃபினாலே வாரத்திற்கு நேரடியாக கொண்டு செல்லும் வகையில் பிக்பாஸ் வீட்டில் டிக்கெட் டூ ஃபினாலே டாஸ்க்குகள் கொடுக்கப்பட்டுள்ளன.


7வது டாஸ்க்..
இதில் இதுவரை 6 டாஸ்க்குகள் நிறைவடைந்த நிலையில் இன்று 7வது டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த டாஸ்க்கில் ஒவ்வொரு ஹவுஸ்மேட்ஸும் மற்ற ஹவுஸ்மேட்ஸுடன் போட்டியிட வேண்டும்.

வேகமாக செய்யும் போட்டியாளர்
பங்கேற்கும் இரண்டு போட்டியாளர்களும் ஒரு பக்கத்தில் வளையத்துக்குள் வைக்கப்பட்டுள்ள பந்துகளை தரையில் உருண்டப்படி எடுத்து மற்றொரு பக்கத்தில் வைக்க வேண்டும். இதனை வேகமாக செய்யும் போட்டியாளரே வெற்றியாளர்.

பாலாஜிக்கு சிறப்பு சலுகை
இதில் பாலாஜிக்கு சிறப்பு சலுகை வழங்கப்பட்டது. அதாவது கோழிப்பண்ணை டாஸ்க்கில் பாலாஜி அதிக கரண்சிகளை பெற்றதால் அவருக்கான போட்டியாளரை அவரை தேர்வு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டது.

ஒவ்வொரு இடம்..
இதில் வெற்றி பெறும் போட்டியாளர்களுக்கு என ஒவ்வொரு இடமாக அறிவித்தார் பிக்பாஸ். மேலும் ஒவ்வொரு சுற்றிலும் தோல்வியுறும் போட்டியாளர்கள் அடுத்தடுத்த சுற்றுக்களுக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

ரம்யாவுக்கு கடைசி இடம்
இதில் ரம்யா முதல் ரவுண்டிலேயே தோற்றுப்போனார். மேலும் தனது பந்துகளை வளையத்துக்குள் கொண்டு வந்து சேர்க்கவும் நீண்ட நேரம் எடுத்துக் கொண்டார். இதனால் அவருக்கு கடைசி இடமான 7வது இடத்தை அறிவித்தார் பிக்பாஸ்.

பாலாஜி ஆரி போட்டி
அதன்படி ஷிவானிக்கு 6வது இடம் வழங்கப்பட்டது. ரியோவுக்கு 5 வது இடம் வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து 4 மற்றும் 3வது இடத்துக்கான போட்டி பாலா மற்றும் ஆரிக்கு இடையே நடைபெற்றது.

தோற்றுப்போன ஆரி
இதில் பாலாவிடம் தோற்றார் ஆரி. இதனால் ஆரிக்கு நான்காவது இடமும் பாலாஜிக்கு 3வது இடமும் வழங்கப்பட்டது. தொடர்ந்து 1 மற்றும் 2 வது இடத்துக்கான போட்டி நடத்தப்பட்டது.

மூன்றாவது அம்பயர்
இதில் பங்கேற்ற சோம் மற்றும் கேபி ஒரே நேரத்தில் பந்துகளை வைத்து ஆட்டத்தை முடித்தனர். இதனால் மூன்றவாது அம்பயரின் முடிவுக்கு காத்திருந்தார் பிக்பாஸ். இருவரும் ஒரே நேரத்தில் வைத்தது உறுதி செய்யப்பட்டதால், மீண்டும் போட்டி நடத்தப்பட்டது.

சோம் வெற்றி
இதில் சோம் வெற்றி பெற்றார். இதனால் சோம சேகருக்கு முதலிடமும் கேபிக்கு இரண்டாவது இடமும் கொடுக்கப்பட்டது. இந்த டாஸ்க்குகள் அனைத்திலும் வெற்றி பெறும் நபர் நேரடியாக ஃபினாலே வாரத்திற்குள் செல்லும் டிக்கெட்டை பெறுவார் என்பது குறிப்பிடத்தக்கது.