For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  ஹிப் ஹாப் தமிழாவை இழுத்து விட்ட சோம்ஸ்.. கேபி, தாத்தா சென்டிமென்ட்டை வச்சி ஓட்டிய சம்ஸ்!

  |

  சென்னை: பிக் பாஸ் வீடு ஆனந்த வீடா? போட்டி களமா? என்கிற பற்ற வைக்கும் டாப்பிக்கை பிக் பாஸ் கொடுத்தாலும், பிக் பாஸ் போட்டியாளர்கள் எல்லாம் ஏதோ நமத்துப் போன பட்டாசு போலத் தான் பேசினார்கள்.

  சாலமன் பாப்பையா, ராஜா, பாரதி பாஸ்கரா பட்டி மன்றம் பண்றாங்க, இந்த சண்டை போடுற குரூபிஸம் குரூப் தானப்பா என ஏகப்பட்ட மைண்ட் வாய்ஸ்கள் நிகழ்ச்சியின் போதே சத்தமாக சமூக வலைதளத்தில் கமெண்ட்டுகளை தெறிக்க விட ஆரம்பித்து விட்டன.

  பிக் பாஸ் வீடு ஆனந்து வீடு என்று ஏதோ தோன்றியதை எல்லாம் சோமசேகர் பேசினார். அவரை தொடர்ந்து சம்யுக்தாவும் அதே டாப்பிக்கை பிக் பண்ணி பேசினார்.

  'அதை' பண்ணுங்க நான் ஒத்துக்கிறேன்.. பட்டி மன்றத்தில் கிழிகிழின்னு கிழித்த பயில்வான் பாலாஜி!

  நாட்டாமை அர்ச்சனா

  நாட்டாமை அர்ச்சனா

  ஒரு தலை பட்சமாக செயல்படுகிறார் என்கிற பெயரை எடுத்த அர்ச்சனா அக்காவையே இந்த பட்டிமன்றம் பேட்டிக்கு நடுவராக பிக் பாஸ் மாற்றி, அதிலும் ஒரு பிரச்சனையை பின்னாடி சொருகி வைத்திருந்தார். பிக் பாஸ் வீடு ஆனந்த வீடா? இல்லை அழுகாச்சி காடா? மன்னிக்கவும் போட்டி களமா? என்கிற டாப்பிக்கை வைத்து ஹவுஸ்மேட்ஸ் மொக்கை போட ஆரம்பித்தனர்.

  இதெல்லாம் நமக்குத் தேவையா

  இதெல்லாம் நமக்குத் தேவையா

  பிக் பாஸ் ரசிகர்கள் இந்த டாஸ்க்கை புரமோவில் பார்த்தவுடனே குறட்டை விட்டு தூங்கி இருப்பார்கள். கடந்த இரு தினங்களாக நல்லா வெறுப்பேத்தி, சண்டை போட்டு, வாடா, போடான்னு திட்டிக்கிட்டு பயங்கர ஜாலியா இருந்துச்சே, இன்னைக்கு ஏன் கன்டென்ட் கிடைக்காம பிக் பாஸ் சொதப்புகிறார் என்கிற குற்றச்சாட்டுகளும் எழுந்தன.

  ஹிப் ஹாப் தமிழா அன்றே சொன்னார்

  ஹிப் ஹாப் தமிழா அன்றே சொன்னார்

  ஆனந்தபுறத்து பேய் வீடு போல நேற்று இருந்த பிக் பாஸ் வீடு, இன்று ஆனந்த வீடு என்கிற டாப்பிக்கில் சோமசேகர் பேசத் தொடங்கினார். பாசங்கள் நேசங்கள் இன்றி வாழ்கிற வாழ்க்கை வேண்டாமடா என ஹிப் ஹாப் தமிழா அன்றே சொன்னார் என ஆரம்பத்திலேயே கைதட்டல் வாங்கினார் சோமசேகர். (இன்னும் அவரு பேசவே ஆரம்பிக்கலை)

  ஆஜீத் ஹாப்பியா தூங்குறான்

  ஆஜீத் ஹாப்பியா தூங்குறான்

  ஆஜீத் கிட்ட எவிக்‌ஷன் பாஸ் இருக்கு, ஆனால், இங்கே எல்லாரும் ஃபேமிலியா இருக்கிறதனால தான் அவன் ஹாப்பியா தூங்கிட்டு இருக்கான். யாருமே அதை தொடலை.. எடுக்கலை என சோம்ஸ் பேசும் போதே ஆஜீத்தின் ஃபேஸ் கொஞ்சம் மாறியது. இது பிக் பாஸ் ஹவுஸ், பிக் பாஸ் டோர்னமெண்ட் அல்ல என ஆரம்பித்த வேகத்தில் முடிச்சுட்டாரு.. (அவ்ளோ தானா.. பட்டிமன்றம்னா பெல் அடிச்சாலும், பேசுவாங்களே)

  கேபி தாத்தா கதை சொன்ன சம்ஸ்

  கேபி தாத்தா கதை சொன்ன சம்ஸ்

  சோம்ஸ் ஆஜீத்தோட எவிக்‌ஷன் பாஸையும் ஹிப் ஹாப் ஆதியின் பாட்டை வச்சிட்டு, சில நொடிகளில் பேசி முடிச்சிட்டு அப்பீட்டாகிட்டாரு. அடுத்து இந்த போட்டி களம் என பாலாஜி பேசினார். பின்னர், ஆனந்த வீடுக்கு ஆதரவா பேசிய சம்யுக்தா, ஒரு பேத்தி மேல இருக்க பாசத்தால தாத்தா கேபியை தூக்கினாரு என சம்பந்தமே இல்லாமல் பேசினார். மத்த யாருமே கேபியை கண்டுக்கலயே.. இதெல்லாம் ஒரு குடும்பமாய்யா என ரசிகர்கள் சம்யுக்தாவின் மொக்கை பேச்சை ஓட்டி வருகின்றனர்.

  English summary
  Somashekar and Samyuktha says Bigg Boss house is a Family bonding bouse. Somashekar talks about Aajeedh and eviction free pass. Samyuktha talks about Gabi and Suresh bonding.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X