»   »  என்னை பேச வைக்காதீங்க, அப்புறம் பல மேட்டர் வெளியே வரும்: நடிகர் பேட்டி

என்னை பேச வைக்காதீங்க, அப்புறம் பல மேட்டர் வெளியே வரும்: நடிகர் பேட்டி

Posted By:
Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: நானும், எனது மனைவியும் பிரிய சில பிரபலங்கள் தான் காரணம் என்று மலையாள நடிகர் திலீப் தெரிவித்துள்ளார்.

மலையாள நடிகர் திலீப்பும், நடிகை மஞ்சு வாரியரும் விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர். விவாகரத்திற்கு பிறகு மஞ்சு மீண்டும் படங்களில் நடிக்கத் துவங்கினார்.

அவர்கள் பிரிய நடிகை காவ்யா மாதவன் காரணம் என்று கூறப்பட்டது. இந்நிலையில் இது குறித்து திலீப் கூறுகையில்,

மஞ்சு

மஞ்சு

நானும், மஞ்சுவும் கணவன் மனைவி என்பதையும் தாண்டி நல்ல நண்பர்களாக இருந்தோம். எங்களுக்குள் எந்தவித ஒளிவு மறைவும் இன்றி இருந்தது.

பிரிவு

பிரிவு

சில பிரபலங்கள் எங்கள் வாழ்வில் நுழைந்து மஞ்சுவின் மனதை மாற்றினார்கள். அதன் பிறகே எங்களுக்கு இடையே பிரிவு ஏற்பட்டது. விவாகரத்து தொடர்பாக மனு தாக்கல் செய்தபோது அதில் அவர்களின் பெயர்களை குறிப்பிட்டிருந்தேன்.

இமேஜ்

இமேஜ்

எங்கள் வாழ்க்கையை நாசமாக்கிய அந்த பிரபலங்கள் தங்களின் இமேஜை பெரிதும் மதிப்பவர்கள். அவர்களின் இமேஜை மனதில் வைத்தே நான் அவர்களின் பெயர்களை வெளியே சொல்லவில்லை. என்னை பேச வைக்க வேண்டாம். நான் வாயை திறந்த பல விஷயங்கள் வெளியே வரும்.

ஆனால்

ஆனால்

தொடர்ந்து எனக்கு தொல்லை கொடுத்தால் அந்த பிரபலங்களின் பெயர்களை வெளியிடுவேன். மஞ்சு படங்களில் நடித்து வருவது மகிழ்ச்சி. அவர் விஷயத்தில் நான் தலையிட மாட்டேன் என்றார் திலீப்.

English summary
Malayalam actor Dileep said that some celebrities played a major part in separating him and his former wife Manju Warrier.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil