»   »  என் மகளை கடத்தி பணம் பறிக்க திட்டமிட்டார்கள்: கமல் திடுக் தகவல்

என் மகளை கடத்தி பணம் பறிக்க திட்டமிட்டார்கள்: கமல் திடுக் தகவல்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தனது மகளை கடத்த திட்டம் தீட்டப்பட்டதாக உலக நாயகன் கமல் ஹாஸன் தெரிவித்துள்ளார்.

உலக நாயகன் கமல் ஹாஸன் தனக்கு பிடித்த 70 இந்திய படங்களின் பட்டியலை பிரபல ஆங்கில நாளிதழிடம் அளித்துள்ளார். அந்த பட்டியலில் கமல் நடித்த மகாநதி படமும் உள்ளது.

இந்நிலையில் மகாநதி கதை குறித்தும் அவர் ஒரு விஷயத்தை தெரிவித்துள்ளார்.

மகாநதி

மகாநதி

தேசிய விருது பெற்ற மகாநதி படத்தில் கமல் நடிக்க மட்டும் இல்லை கதை, திரைக்கதையும் எழுதியிருந்தார். கதைப்படி ஹீரோவின் மகளை கடத்தி விற்றுவிடுவார்கள்.

கமல்

கமல்

மகாநதி கதையை எழுத என்னை எது தூண்டியது என்று இதுவரை நான் பேசியது இல்லை. என் மகள்கள் வளர்ந்துவிட்டதால் தற்போது அதை கூறுகிறேன் என்கிறார் கமல்.

கடத்தல்

கடத்தல்

என் வீட்டில் வேலை செய்தவர்கள் என் மகளை கடத்தி பணம் பறிக்க திட்டமிட்டனர். இதற்கு அவர்கள் ஒத்திகையும் பார்த்தனர். தற்செயலாக எனக்கு அவர்களின் திட்டம் தெரிய வந்து கோபம் அடைந்தேன். என் குழந்தைக்காக கொலையும் செய்ய தயார் ஆனேன் என்று கமல் தெரிவித்துள்ளார்.

கதை

கதை

புது திரைக்கதை எழுத நினைத்து அது ஒரு மாதமாக தள்ளிப் போனது. பின்னர் அமர்ந்தபோது தானாக இந்த கதையை எழுதிவிட்டேன். ஏதாவது கெட்டது நடந்து விடுமோ என்ற பயம் கூட ஒரு காரணமாக இருக்கலாம் என்று கமல் கூறியுள்ளார். கமலுக்கு ஸ்ருதி, அக்ஷரா என்று இரண்டு மகள்கள் உள்ளனர். இதில் யாரை கடத்த திட்டம் தீட்டப்பட்டது என்பதை அவர் தெரிவிக்கவில்லை.

English summary
Kamal Haasan said that his household help planned to kidnap his daughter for ransom and this made him write the story of Mahanadi.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil