»   »  எவனோ ஒருத்தன் தனுஷை என் மகன் என்கிறான்: கஸ்தூரி ராஜா குமுறல்

எவனோ ஒருத்தன் தனுஷை என் மகன் என்கிறான்: கஸ்தூரி ராஜா குமுறல்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: எவனோ ஒருவன் வந்து தனுஷை என் மகன் என்கிறான் என இயக்குனர் கஸ்தூரி ராஜா தெரிவித்துள்ளார்.

தனுஷ் தங்களின் மகன் கலையரசன் என திருப்புவனத்தை சேர்ந்த கதிரேசன், மீனாட்சி தம்பதி மேலூர் குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

இந்நிலையில் பார்க்க தோணுதே படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட தனுஷின் தந்தையும், இயக்குனருமான கஸ்தூரி ராஜா கூறுகையில்,

பார்க்க தோணுதே

பார்க்க தோணுதே

பார்க்க தோணுதே என்ற தலைப்பை பார்த்ததும் என் காதலியை பார்க்க தோணுது. நான் ஒரேயொரு பெண்ணை காதலித்தேன். ஆனால் அவரை திருமணம் செய்யவில்லை. இது என் மனைவிக்கு தெரியும்.

அம்மா, அப்பா

அம்மா, அப்பா

தாலாட்டிய அம்மா, தோளில் சுமந்த அப்பா ஆகியோரை பார்க்கத் தோணுது. பள்ளி நண்பனை பார்க்கத் தோணுது. 1974ம் ஆண்டு மதுரை மெஜுரா கோட்ஸில் ரூ.4 ஆயிரம் சம்பளத்திற்கு வேலை செய்தேன்.

மகிழ்ச்சி

மகிழ்ச்சி

நான் ரூ. 4 ஆயிரம் சம்பளத்திற்கு வேலை பார்த்தபோது இருந்த சந்தோஷம் தற்போது இல்லை. அப்போது முதல் மகன் செல்வா, பின்னர் தனுஷ் பிறந்தது எல்லாம் மகிழ்ச்சியானவை.

தனுஷ்

தனுஷ்

எவனோ ஒருவன் வந்து தனுஷை தனது மகன் என்கிறான். என் வாழ்வில் தான் எவ்வளவு பிரச்சனை. தற்போது வசதி உள்ளது ஆனால் மகிழ்ச்சியும், சுதந்திரமும் இல்லை.

English summary
Director Kasthuri Raja said that someone is claiming Dhanush as his son at an audio launch function.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil