»   »  யாராவது என்னை கிள்ளுங்களேன்: நம்ப முடியாமல் திக்குமுக்காடும் கவுதம் கார்த்திக் #MrChandramouli

யாராவது என்னை கிள்ளுங்களேன்: நம்ப முடியாமல் திக்குமுக்காடும் கவுதம் கார்த்திக் #MrChandramouli

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நடப்பது உண்மையா இல்லையா என்பதை நம்ப முடியாத அளவுக்கு மகிழ்ச்சியில் உள்ளார் கவுதம் கார்த்திக்.

திரு இயக்கத்தில் கவுதம் கார்த்திக் நடிக்கும் மிஸ்டர் சந்திரமௌலி படத்தின் ஷூட்டிங் இன்று துவங்கியுள்ளது. இந்த படத்தில் கவுதமுடன் அவரது தந்தை கார்த்திக்கும் நடிக்கிறார்.

அப்பாவும், மகனும் முதல் முறையாக ஒன்றாக சேர்ந்து நடிக்கிறார்கள்.

மகிழ்ச்சி

சிரிப்பை கட்டுப்படுத்த முடியவில்லை. என் தந்தையுடன் நடிக்கிறேன் என நம்பவே முடியவில்லை. யாராவது என்னை கிள்ளுங்களேன் என்று கவுதம் கார்த்திக் ட்வீட்டியுள்ளார்.

பூஜை

மிஸ்டர் சந்திரமௌலி படம் பூஜையுடன் இன்று துவங்கியுள்ளது. செட்டில் எடுத்த புகைப்படங்களை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார் கவுதம் கார்த்திக்.

அடல்ட் காமெடி

அடல்ட் காமெடி

ஹர ஹர மகாதேவகி வெற்றியை அடுத்து கவுதம் கார்த்திக்கும், இயக்குனர் சந்தோஷ் பி. ஜெயக்குமாரும் மீண்டும் ஒன்று சேர்ந்துள்ள படம் இருட்டு அறையில் முரட்டுக் குத்து என்பது குறிப்பிடத்தக்கது.

வாழ்த்து

நண்பர் திரு இயக்கத்தில் கார்த்திக் சார், கவுதம் கார்த்திக், ரெஜினா நடிப்பில் தனஞ்செயன் சார் தயாரிப்பில் இன்று தொடங்கும் இந்த திரைப்படம் உறுதியாக மாபெரும் வெற்றி பெறும்.. வாழ்த்துக்கள்...திரு பட்டைய கெளப்புங்க என இயக்குனர் சுசீந்திரன் வாழ்த்தியுள்ளார்.

English summary
Gautham Karthik's upcoming movie MrChandramouli work has started today with pooja. Karthik has joined the team with his son. Gautham Karthik is too excited to act with his dad Karthik.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil