»   »  நாங்களும் பாடுவோம்ல: பாடகி அவதாரம் எடுத்த 'லேடி ரஜினி'

நாங்களும் பாடுவோம்ல: பாடகி அவதாரம் எடுத்த 'லேடி ரஜினி'

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: பாலிவுட் நடிகை சோனாக்ஷி சின்ஹா பாடகி அவதாரம் எடுத்துள்ளார்.

பாலிவுட் நடிகை சோனாக்ஷி சின்ஹா தன்னால் நன்றாக பாட்டு பாடவும் முடியும் என்று நிரூபித்துள்ளார். பாலிவுட் நடிகைகள் ஆலியா பட், ஷ்ரத்தா கபூர் ஆகியோரை அடுத்து சோனாக்ஷியும் பாடகி அவதாரம் எடுத்துள்ளார்.

அவர் ஆஜ் மூட் இஷ்கஹாலிக் ஹை என்ற பாடலை பாடியுள்ளார். ஹிப்பி கெட்டப்பில் வந்து சோனா பாடும் அந்த வீடியோவின் டீஸர் முதலில் வெளியானது.

Sonakshi sinha debut song aaj mood ishqholic with uc browser

தற்போது முழுப்பாடலும் டி-சீரிஸின் யூடியூப் சேனலில் வெளியாகியுள்ளது. இந்த வீடியோவை டி-சீரிஸ் இந்தியாவின் மிகப் பிரபலமான மொபைல் பிரவுசரான யுசி பிரவுசரின் யுசி வெப்புடன் சேர்ந்து வெளியிட்டுள்ளது.

புத்தாண்டை வரவேற்க மக்கள் தயாராகி வரும் நிலையில் இந்த பாடல் வீடியோ வெளியாகியுள்ளது. வீடியோ வெளியான 24 மணிநேரத்திற்குள் அதை 3 லட்சம் பேர் பார்த்து ரசித்துள்ளனர்.

கோவாவின் கடற்கரை பின்னணயில் எடுக்கப்பட்டுள்ள வீடியோவில் சோனாவின் நடன அசைவுகளுக்கு பின்னால் இருப்பது ஏபிசிடி பட புகழ் சல்மான் யசுப் கான் என்பது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து யுசி வெப் இந்தியாவின் எம்.டி. கென்னி கூறுகையில்,

உலக மக்களின் மொபைல் லைப்ஸ்டைலை மாற்றியமைக்க நாங்கள் முயற்சித்து வருகிறோம். இந்தியாவில் நாங்கள் தான் நம்பர் ஒன் மொபைல் பிரவுசர். எங்கள் பிரபவுசரில் பாலிவுட் பாடல்கள், படங்கள், வீடியோக்கள் உள்ளன. சோனாக்ஷியின் பாடல் மூலம் யுசி பிரவுசர் பலரின் கவனத்தை ஈர்க்கும் என்றார்.

English summary
Sonakshi Sinha's debut song 'Aaj Mood Ishqholic Hai', has been launched by T-Series, in association with UCWeb, maker behind India's most popular mobile browser - UC Browser.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil