Just In
- 20 min ago
காயப்படுத்தியிருந்தால் மன்னித்து விடுங்கள்.. ஃபினாலே மேடையில் விழுந்து உருக்கமாக மன்னிப்பு கேட்ட ஆரி
- 41 min ago
கடைசியா நேர்மை வென்று விட்டது.. பிக் பாஸ் டைட்டில் வின்னர் ஆரி.. ரன்னர்-அப் பாலாஜி முருகதாஸ்!
- 1 hr ago
கதர் ஆடையை கையில் எடுத்த கமல்.. புதிய ஃபேஷன் பிராண்ட் ‘KH’ .. போட்டியாளர்களுக்கு கதர் துணி பரிசு!
- 1 hr ago
கமலையே திக்குமுக்காட வைத்த ஷெரின்.. மனசே இல்லாமல் வெளியே வந்த ரியோ.. பங்கம் செய்த பிக்பாஸ்!
Don't Miss!
- News
தமிழகத்தில் வீடு இல்லாத குடும்பமே இல்லை என்ற நிலை உருவாக்கப்படும்... முதலமைச்சர் புதிய வாக்குறுதி..!
- Finance
48% அதிகரிப்பாம்.. பெட்ரோல், டீசல் மீதான வரியால் தூள் கிளப்பிய வரி வசூல்.. !
- Automobiles
20-இன்ச் அலாய் சக்கரங்களுடன் கியா சொனெட் காரை பார்த்திருக்கீங்களா?! இங்க பாத்துக்கோங்க
- Sports
வலிமையான அணிகள் மோதும் 62வது போட்டி... பரபர அனுபவத்திற்கு தயாராகும் ரசிகர்கள்!
- Education
ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!
- Lifestyle
வார ராசிபலன் 17.01.2021 முதல் 23.01.2021 வரை – இந்த ராசிக்காரர்களுக்கு லாபம் நிறைந்த வாரமிது…
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
நல்லா கேட்டுக்குங்க.. நானும் வாங்கியாச்சு.. வாங்கியாச்சு.மாலத்தீவில் சோனாக்ஷி பெற்ற சர்டிபிகேட்!
சென்னை: கடலுக்குள் நீந்தி செல்லும் ஸ்கூபா டைவிங் சான்றிதழ் பெற்றிருப்பதாக நடிகை சோனாக்ஷி சின்ஹா தெரிவித்துள்ளார்.
சுற்றுலா நாடான மாலத்தீவை மினி பாலிவுட், கோலிவுட் ஆக்கியிருக்கிறார்கள் நம் ஹீரோயின்கள்.
தடுக்கி விழுந்தால் ஒரு ஹீரோயினை பார்க்கலாம் என்கிற அளவுக்கு அங்கு இருக்கிறது நடிகைகளின் டிராபிக்!

குடும்பத்துடன் விசிட்
அங்கு காஜல் அகர்வால் தனது காதல் கணவருடன் ஹனிமூன் சென்றுவந்தார். பிறகு நடிகை வேதிகா குடும்பத்துடன் விசிட் அடித்தார். பிறகு பிரணிதா சென்று ஸ்கூபா டைவிங் முதல் அங்கிருக்கும் பல்வேறு பகுதிகளில் இருந்து புகைப்படங்களாக எடுத்து பதிவிட்டார். பின்னர் ரகுல் பிரீத் சிங்.

காதலருடன் டாப்ஸி
அவரும் அங்கு குடும்பத்துடன் சென்று பிகினி உடை ஸ்டில்களை வெளியிட்டு வந்தார். பிறகு சமந்தா, தனது கணவரும் நடிகருமான நாக சைதன்யாவுடன் அங்கு சென்றிருக்கிறார். அவர் வெளியிடும் புகைப்படங்களும் வைரலாகி வருகின்றன. இவர்களுக்கு முன் காதலருடன் நடிகை டாப்ஸி உட்பட பலர் அங்கு சென்று வந்தனர்.

கடலுக்கு அடியில்
அவர்களை அடுத்து இப்போது சென்றிருக்கிறார், நடிகை சோனாக்ஷி சின்ஹா. அவரும் வழக்கம்போல அங்கிருந்து பிகினி ஸ்டில்களை வெளியிட்டு வந்தார். இந்நிலையில், கடலுக்கு அடியில் நீந்தி சென்று பார்க்கும் ஸ்கூபா டைவிங் தேர்வில் வென்று சான்றிதழை பெற்றுள்ளார். இதை மகிழ்ச்சியுடன் தனது சோசியல் மீடியா பக்கத்தில் தெரிவித்திருக்கிறார் அவர்.

ஸ்கூபா டைவர்
இதுபற்றி, 'நான் இப்போது உரிமம் பெற்ற ஸ்கூபா டைவர். பல வருடங்களாக பெறநினைத்து, இப்போது முடித்துள்ளேன். கடல் மீதான என் காதல் இன்னும் அதிகரித்திருக்கிறது. இதை கற்றுக்கொண்டதன் மூலம் அடுத்தக் கட்டத்துக்கு சென்றிருக்கிறேன். கண்டிப்பான மற்றும் கூலான பயிற்சியாளர் முகமது கிடைத்ததற்கு நன்றி.

முதல் முறையாக
இவரை விட சிறந்த ஆசிரியரை நான் கேட்டிருக்க முடியது. (நான் எந்த தேர்விலும் 100 சதவிகித மார்க் பெற்றதில்லை. இதில் முதல் முறையாகப் பெற்றுள்ளேன்) என்று கூறியுள்ளார். இதையடுத்து நடிகை ஹுமா குரேஸி, சுனில் குரோவர் உட்பட பலர் திரைபிரபலங்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

சத்ருஹன் சின்ஹா
பிரபல இந்தி நடிகர் சத்ருஹன் சின்ஹாவின் மகள் சோனாக்ஷி சின்ஹா. இந்தியில் ஏராளமான படங்களில் நடித்துள்ள இவர், தமிழில் கே.எஸ்.ரவிகுமார் இயக்கிய லிங்கா படத்தில் ரஜினி காந்துக்கு ஜோடியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.