»   »  ஆடை வடிவமைப்பாளர், நடிகை, பாடகி.... விதவித அவதாரங்களில் ஜொலிக்கும் சோனாக்ஷி சின்ஹா

ஆடை வடிவமைப்பாளர், நடிகை, பாடகி.... விதவித அவதாரங்களில் ஜொலிக்கும் சோனாக்ஷி சின்ஹா

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: ஆடை வடிவமைப்பாளர், நடிகையைத் தொடர்ந்து தற்போது பாடகி அவதாரம் எடுத்திருக்கிறார் இந்தி நடிகையான சோனாக்ஷி சின்ஹா.

இந்தி சூப்பர்ஸ்டார் சல்மான் கானின் தபாங் படத்தில் அறிமுகமான சோனாக்ஷி சின்ஹா தொடர்ந்து ரவுடி ரத்தோர் மற்றும் தமிழில் லிங்கா ஆகிய படங்களில் நடித்தார்.

Sonakshi Sinha makes her debut as a singer

இவர் தற்போது பாடகியாக அவதாரம் எடுத்திருக்கிறார் இந்தியன் ஐடியல் ஜூனியர் என்னும் நிகழ்ச்சியில் நடுவராக இருந்த சோனாக்ஷி இஷ்க்ஹோளிக் என்னும் பாடலைப் பாடியிருக்கிறார்.

டி சீரிஸ் தலைவர் புஷன் குமார் கூறும்போது "சோனாக்ஷியின் குரல் மிகவும் இனிமையானது இந்தப் பாடல் மிகவும் நன்றாக வந்திருக்கிறது.

மேலும் பாடலின் வரிகள் அனைவரையும் கவரும் வகையில் இருப்பதால் இசை உலகில் சோனாஷிக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும்" என்று கூறியிருக்கிறார்.

Sonakshi Sinha makes her debut as a singer

இளைஞர்களைக் கவரும் ஹிப்ஹாப் பாடலாக உருவாகி இருக்கும் இதில் சில ராப் பாடல்களையும் சோனாக்ஷி பாடியிருக்கிறாராம். இதில் இடம்பெறும் வீடியோ பாடல் ஒன்றை பாடகர் யோ யோ ஹனிசிங்குடன் இணைந்து பாடவிருப்பதாக சோனாக்ஷி மகிழ்ச்சியுடன் தெரிவித்திருக்கிறார்.

தற்போது ஏ.ஆர்.முருகதாஸின் அகிரா மற்றும் போர்ஸ் ஆகிய படங்களில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

English summary
Bollywood Actress Sonakshi Sinha now makes her debut as a singer with a single ishqoholic.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil