»   »  பிரியங்கா சோப்ரா தலையில் ஐஸ்கூடையை வைக்கும் சோனாக்‌ஷி!

பிரியங்கா சோப்ரா தலையில் ஐஸ்கூடையை வைக்கும் சோனாக்‌ஷி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை : சினிமாவில் ஒரு நடிகை, சக நடிகையைப் பாராட்டுவது என்பது மிகவும் அரிதான விஷயம். பிடித்த நடிகை யார் என நடிகைகளிடம் கேட்டால், ஃபீல்ட் அவுட் ஆன நடிகைகளின் பெயரைச் சொல்லித் தப்பித்துக் கொள்வார்கள்.

ஆனால், இந்த விஷயத்தில், பாலிவுட்டில் சமீபகாலமாக நல்ல மாற்றம் ஏற்பட்டு வருகிறது. சமீபத்தில், சக நடிகை பிரியங்கா சோப்ராவைப் பாராட்டித் தள்ளியுள்ளார் சோனாக்ஷி சின்ஹா.

Sonakshi sinha praised priyanka chopra

உள்நாட்டுப் போரால் பாதிக்கப்பட்டுள்ள சிரியாவுக்கு, நல்லெண்ணத் துாதராக, பிரியங்கா சோப்ராவை நியமித்துள்ளது ஐ.நா சபை. அங்கு பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளுக்கு உதவும் பணியில் பிரியங்கா தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.

Sonakshi sinha praised priyanka chopra

இதுகுறித்து சோனாக்ஷி சின்ஹா, 'சம்பாதித்தோமா... தலைமுறைக்குச் சொத்து சேர்த்தோமா என சுயநலமாக செயல்படுவோர் மத்தியில், பொதுநலத்துடன் செயல்படும் பிரியங்காவை எவ்வளவு பாராட்டினாலும் தகும். பெண்மைக்கு மிகச் சிறந்த முன்னுதாரணமாகத் திகழ்கிறார் அவர். எனக்கும் வாய்ப்புக் கிடைத்தால், இதுபோன்ற பொதுநலப் பணிகளில் ஈடுபடுத்திக் கொள்வேன்' என உருக்கமாகக் கூறியுள்ளார்.

English summary
Sonakshi Sinha has praised actress Priyanka Chopra. Sonakshi says Priyanka is the best example of female.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil