»   »  நாளை வெளியாகும் அகிரா டிரெய்லர்.. இன்றே குட்டி வீடியோவை லீக் செய்த சோனாக்ஷி

நாளை வெளியாகும் அகிரா டிரெய்லர்.. இன்றே குட்டி வீடியோவை லீக் செய்த சோனாக்ஷி

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சோனாக்ஷி சின்ஹா நடித்திருக்கும் 'அகிரா' படத்தின் டிரெய்லரை, படக்குழு நாளை வெளியிடுகிறது.

கத்தி படத்துக்குப்பின் இந்தியில் சோனாஷி சின்ஹாவை வைத்து அகிரா(தமிழில் வெளியான மௌன குரு படத்தின் ரீமேக்) படத்தை, ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வருகிறார்.

Sonakshi Sinha's Akira Trailer Release Details

இதில் சோனாக்ஷியுடன் இணைந்து அதுல் குல்கர்னி, ராய் லட்சுமி, அனுராக் காஷ்யப் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர். கடந்த வாரம் வெளியான இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

பர்ஸ்ட் லுக்கில் சோனாக்ஷி சின்ஹா கோபத்துடன் நிற்பது போன்று புகைப்படங்களை வடிவமைத்திருந்தனர். இந்நிலையில் சோனாக்ஷி ஒரு சிறு வீடியோ ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார்.

அறை ஒன்றிலிருந்து வெளியே வரும் சோனாக்ஷியை இருவர் தாக்குவது போலவும், அவர்களை இவர் தடுப்பது போலவும் காட்சிகள் உள்ளன. இதன் மூலம் சோனாஷி சண்டைக்காட்சிகளிலும் பட்டையைக் கிளப்பியிருப்பதாகத் தெரிகிறது.

இந்நிலையில் நாளை மாலை 4 மணிக்கு இப்படத்தின் டிரெய்லரை வெளியிடுவதாக படக்குழு அறிவித்துள்ளது. அகிரா செப்டம்பர் 2ம் தேதி வெளியாகிறது.

இதனைத் தொடர்ந்து மகேஷ்பாபு படத்தை தமிழ், தெலுங்கு என 2 மொழிகளிலும் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கவுள்ளார்.

English summary
Sonakshi Sinha Starrer 'Akira' Trailer will be Out on Tomorrow.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil