»   »  மம்மி, டாடி கைபிடித்து ராம்ப் வாக் செய்த அபிஷேக், சோனம், சோனாக்ஷி

மம்மி, டாடி கைபிடித்து ராம்ப் வாக் செய்த அபிஷேக், சோனம், சோனாக்ஷி

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: மும்பையில் நடந்த மிஜ்வான் ஃபேஷன் ஷோவில் ராம்ப் வாக் செய்ய தனது தந்தை சத்ருகன் சின்ஹாவுக்கு கற்றுக் கொடுத்துள்ளார் நடிகை சோனாக்ஷி சின்ஹா.

உத்தர பிரதேச மாநில பெண்களின் மேம்பாட்டுக்காக பாலிவுட் நடிகை சபானா ஆஸ்மி தலைமை தாங்கி நடத்தும் என்ஜிஓவான மிஜ்வான் வெல்ஃபேர் சொசைட்டிக்காக ஃபேஷன் ஷோ நடத்தப்பட்டது. ஒரு நல்ல காரியத்திற்காக நடத்தப்பட்ட ஃபேஷன் ஷோவில் பாலிவுட் பிரபலங்கள் பலர் கலந்து கொண்டு ராம்ப் வாக் செய்தனர்.

அதில் சில பிரபலங்கள் தங்களின் அப்பா, அம்மாவுடன் ராம்ப் வாக் செய்தனர்.

அமிதாப் பச்சன்

அமிதாப் பச்சன்

பாலிவுட் ஜாம்பவான் அமிதாப் பச்சன் தனது மகள் ஸ்வேதா பச்சன் நந்தாவுடன் ஃபேஷன் ஷோவில் ஒய்யாரமாக நடந்தார். இரண்டு வளர்ந்த குழந்தைகளின் தாயான ஸ்வேதா நடிகைகளுக்கு இணையாக சிக்கென்று உள்ளார்.

சோனம்

சோனம்

பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு குணமடைந்துள்ள நடிகை சோனம் தனது தந்தையும், பாலிவுட் நடிகருமான அனில் கபூருடன் ராம்ப் வாக் செய்தார். அண்மையில் சோனம் வோக் பத்திரிக்கைக்காக முன்னழகில் முக்கால்வாசியை காட்டி அனைவரையும் அதிர வைத்தார்.

சோனாக்ஷி

சோனாக்ஷி

நடிகை சோனாக்ஷி சின்ஹா தனது தந்தையும், நடிகருமான சத்ருகன் சின்ஹாவுடன் ராம்ப் வாக் செய்தார். ராம்ப்பில் எப்படி நடிப்பது என்று சோனாக்ஷி தனது தந்தைக்கு கற்றுக் கொடுத்தாராம். இதை அவரே தெரிவித்துள்ளார்.

அபிஷேக்

அபிஷேக்

நடிகர் அபிஷேக் பச்சன் தனது தாய் ஜெயா பச்சனின் கை பிடித்து சூப்பராக நடந்து வந்தார். தாயும், மகனும் ஒரே நிறத்தில் ஆடை அணிந்திருந்தனர். அவர்கள் பலரின் கவனத்தையும் ஈர்த்தனர்.

பர்ஹான் அக்தர்

பர்ஹான் அக்தர்

நடிகர் பர்ஹான் அக்தர் தனது தந்தையும், பாடல் ஆசிரியருமான ஜாவித் அக்தருடன் ராம்ப்பில் நடந்தார். ஜாவித் அக்தரின் இரண்டாவது மனைவி தான் சபானா ஆஸ்மி என்பது குறிப்பிடத்தக்கது.

மனிஷ் மல்ஹோத்ரா

மனிஷ் மல்ஹோத்ரா

ஆடை வடிவமைப்பாளரான மனிஷ் மல்ஹோத்ரா அமிதாப் பச்சன், ஜெயா பச்சன் உள்ளிட்ட ஷோ ஸ்டாப்பர்களுடன் ராம்ப் வாக் செய்தார்.

English summary
Bollywood actress Sonakshi Sinha has taught her actor dad Shatrughan Sinha how to walk in the ramp.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil