»   »  சோனியா அகர்வால் மீண்டும் போலீசாக நடிக்கும் எவனவன்!

சோனியா அகர்வால் மீண்டும் போலீசாக நடிக்கும் எவனவன்!

Posted By:
Subscribe to Oneindia Tamil
அடுத்தடுத்து காக்கிச் சட்டை வேடங்களாக வருகிறது சோனியா அகர்வாலுக்கு. அவர் போலீஸ் அதிகாரியாக நடித்த சாயா படம் சமீபத்தில்தான் வெளியானது. அடுத்து அவர் மீண்டும் போலீஸ் வேடம் போட்டுள்ளார் எவனவன் படத்துக்காக.

டிரீம்ஸ் ஆன் பிரேம்ஸ் என்ற பட நிறுவனம் சார்பாக தங்கமுத்து, பி.கே.சுந்தர், கருணா, நட்ராஜ் ஆகியோர் இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்தில் வின்சென்ட் அசோகன், புதுமுகம் அகில் சந்தோஷ், முருகாற்றுப் படை சரண், சாக்ஷி சிவா ஆகியோரும் நடிக்கிறார்கள்.

Sonia Agarwal wears police uniform again for Yavanavan

இசை - பெடோ பீட். கதை, திரைக்கதை,வசனம் எழுதி இயக்குகிறார் ஜெ.நட்டிகுமார். இவர் தந்தை ஜானகிராமன் மோகமுள் உட்பட பல வெற்றிப் படங்களைத் தயாரித்தவர்.

மெய்ப் பொருள், பனித்துளி படங்களை இயக்கியவர் நட்டிகுமார்.

எவனவன் படம் குறித்து அவர் கூறுகையில், "எதையும் திட்டமிட்டு செயல்படுவதிலும், செயல்படுத்துவதிலும் இளைஞர்கள் புத்திசாலிகள். .இதை செய்தால் இப்படி செய்தால் பின் விளைவுகள் இப்படித்தான் இருக்கும் என்று உணர்ந்தே செய்பவர்கள் பலர்.

பின் விளைவுகள் பற்றி தெரியாமல் இறங்கி சிரமப்படும் இளைஞர்கள் பலர் அப்படித்தான் சின்ன தவறுதானே செய்கிறோம். அதனால் என்ன பெரிதாக வந்து விட போகிறது என்று நினைத்து இளைஞன் ஒருவன் செய்த தவறு அவனை என்ன மாதிரியான சிக்கலில் ஆழ்த்துகிறது. என்பதுதான் கதைக் களம்.

இதில் வின்சென்ட் அசோகனும், சோனியா அகர்வாலும் போலீஸ் அதிகாரிகளாக நடிக்கிறார்கள். கண்டுபிடிக்க முடியாத ஒரு குற்றம் ஒன்றை விறு விறுப்பாகக் கண்டு பிடிக்கும் அதிகாரியாக சோனியா அகர்வால் நடிக்கிறார்.

மெய்ப்பொருள், பனித்துளி படங்களின் படிப்பிடிப்பு பெரும்பகுதி அமெரிக்காவில் படமாக்கினோம். ஆனால் எவனவன் படத்தின் படப்பிடிப்பு சென்னை, ஆந்திராவில் நடந்தது. பாடல் காட்சிகள் மலேசியாவில் படமானது," என்றார்.

English summary
Sonia Agarwal, Vincent Ashokan starring Natti Kumar's Evanavan movie is nearing its completion.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil