»   »  சோனாடன் இசை... இனி இணையத்திலிருந்தே முழுப் படத்துக்கும் இசை பெறலாம்!

சோனாடன் இசை... இனி இணையத்திலிருந்தே முழுப் படத்துக்கும் இசை பெறலாம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஒரு திரைப்படத்தின் பாடல்களுக்கான இசையையும், பின்னணி இசையையும் இணைய தளத்திலேயே நம்மால் பெற முடியுமா?

முடியும் என்கிறது சோனாடன் (SONOTON) நிறுவனம்.

எப்படி? வாங்க விவரமா பார்க்கலாம்.

SONOTON extends music business in India

ஜெர்மனியிலிருக்கும் புகழ் பெற்ற இசை உருவாக்க நிறுவனம்தான் 'SONOTON'. 50 ஆண்டுகளாகச் செயல்பட்டு வரும் இசை உற்பத்தி நிறுவனம் இது. உலகத்தின் பல நாடுகளில் உருவாகும் திரைப்படங்களில் இந்நிறுவனத்தில் உருவாகும் இசை பயன்படுத்தப்படுகிறது. சமீபத்தில் அகாடெமி (ஆஸ்கர்) விருது பெற்ற 'Manchester by the Sea' திரைப்படத்தில் கூட இந்நிறுவனத்தின் இசை பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

ஹாலிவுட்டின் Universal Pictures, 20th Century Fox, Warner Bros, Sony Pictures, Columbia pictures ஆகிய புகழ் பெற்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனங்கள் 'SONOTON' இசை நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள்.

இந்நிறுவனம் தன் இசையை இந்திய படவுலகினரும் பயன்படுத்தும் வகையில் செயல் வடிவில் இறங்கியிருக்கிறது. அதற்கான அதிகார பூர்வ இந்திய காப்புரிமை சென்னையிலிருக்கும் லேகா ரத்னகுமாரின், லேகா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டிருக்கிறது.

திரைப்படம், விளம்பரப் படங்கள், மாணவர்களின் பயிற்சி படங்கள், ஆவணப் படங்கள், செய்தி ஊடகங்கள், வானொலி, தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் தொடர்களுக்கு இசை தேவைப்படுவோர் சோனட்டானின் www.sonofind.com என்ற இணையதளத்திற்குச் சென்றால், அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ளலாம்.

உலகின் பல நாடுகளைச் சேர்ந்த 2500 இசையமைப்பாளர்களின் 2,00,000 க்கும் மேற்பட்ட இசைக் கோர்வைகள் இந்த இணையதளத்தில் இருக்கின்றன. அந்த பலவகை இசைக் கோர்வைகளையும் கேட்டு, தங்களுக்கு அவற்றில் எது வேண்டும் என்று தீர்மானித்து, அதற்குரிய கட்டணத்தை இணையதளத்தில் செலுத்தி, இணையதளத்தின் மூலமே அவற்றைப் பெற்று தங்களின் படைப்புகளில் பயன்படுத்திக் கொள்ளலாம்.

SONOTON extends music business in India

அதே போல android app மற்றும் apple app அலைபேசியிலேயே Sonofind app -ஐ பதிவிறக்கம் செய்து பயன்படுத்திக் கொள்ளலாம்.

சோனாடனின் இந்தியப் பிரதிநிதியான லேகா ரத்னகுமார், தன் லேகா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் மூலம் இந்திய இசையை உலகமெங்கும் கொண்டு சேர்க்கும் பணியிலும் ஈடுபட்டிருக்கிறார்.

இந்திய இசைக் கலைஞர்களை வைத்து அவர் சமீபத்தில் உருவாக்கியிருக்கும் 11 இசை ஆல்பங்கள் 'SONOTON' நிறுவனத்தின் மூலம் உலகமெங்கும் தயாராகும் திரைப்படங்களில் இடம் பெறப் போகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Lekha Productions, headed by Lekha Rathnakumar is the Sole authorised license holder for all the music tracks of Sonoton and representing Sonoton for the territory of India.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil