twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    படத்துல வில்லன்.. நிஜத்துல ஹீரோ.. சொந்த ஊர்களுக்கு தொழிலாளர்களை அனுப்ப 10 பஸ்.. ஹேட்ஸ் ஆஃப் சோனு!

    |

    மும்பை: புலம்பெயர்ந்த தொழிலாளர்களை அவரவர் சொந்த ஊர்களுக்கு செல்ல பத்து பேருந்துகளை நடிகர் சோனு சூட் ஏற்பாடு செய்திருப்பது பலரது பாராட்டுக்களை அள்ளி இருக்கிறது.

    நாடு முழுவதும் லாக்டவுன் அறிவிக்கப்பட்டதால், சொந்த ஊர்களுக்கு செல்ல முடியாமலும், இருக்கும் இடத்தில் வேலையும் இன்றி பசியால் பல லட்சம் தொழிலாளர்கள் தினமும் அவதி பட்டு வருகின்றனர்.

    அவர்களை மீட்க மத்திய, மாநில அரசுகளும் ஆலோசனைகளை நடத்தி ரயில் சேவைகளை தொடங்கி இருக்கிறது.

    அமேசான் பிரைமில் ஜோதிகாவின் 'பொன்மகள் வந்தாள்..' இந்த தேதியில்தான் ரிலீஸ் ஆகுதாமே.. புது தகவல்!அமேசான் பிரைமில் ஜோதிகாவின் 'பொன்மகள் வந்தாள்..' இந்த தேதியில்தான் ரிலீஸ் ஆகுதாமே.. புது தகவல்!

    தொழிலாளர்களுக்கு உதவி

    தொழிலாளர்களுக்கு உதவி

    இந்நிலையில், தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல இந்திய மொழிகளில் வில்லனாக நடித்துள்ள நடிகர் சோனு சூட். மகாராஷ்ட்ரா மற்றும் கர்நாடக அரசுகளிடம் அனுமதி பெற்று, சொந்த ஊருக்கு செல்ல முடியாமல் தவித்து வந்த புலம்பெயர் தொழிலாளர்களை அவரவர் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க ஏற்பாடு செய்துள்ளார்.

    10 பேருந்துகள்

    10 பேருந்துகள்

    அருந்ததி படத்தில் அகோரியாக நடித்து மிரட்டிய சோனு சூட்டுக்கு நந்தி விருது உள்ளிட்ட பல விருதுகள் கிடைத்தன. தமிழ், தெலுங்கு, இந்தி என கலக்கிய சோனு சூட், ஜாக்கி சான் நடிப்பில் வெளியான சர்வதேச படமான குங்ஃபூ யோகா படத்திலும் வில்லனாக நடித்துள்ளார். நேற்று சுமார் 10 பேருந்துகளில் 350 தொழிலாளர்களை உரிய பாதுகாப்புடன் அனுப்பி வைத்துள்ளார்.

    ரீல் வில்லன்.. ரியல் ஹீரோ

    ரீல் வில்லன்.. ரியல் ஹீரோ

    பல படங்களில் எம்.ஜி.ஆர்., சிவாஜிக்கு வில்லனாக நடித்த நம்பியார் எந்தளவுக்கு ஐயப்ப பக்தன் என்றும், அவரது நல்ல மனம் குறித்தும் பலரும் பாராட்டி உள்ளனர். அதே போல, சினிமாவில் வில்லனாக மிரட்டும் சோனு சூட், ரியலில் ஹீரோவாக இப்படியொரு சேவையை செய்திருப்பது பலரையும் வாயாற பாராட்ட வைத்திருக்கிறது. ஹேட்ஸ் ஆஃப் சோனு சூட்.

    குடும்பம் தான் முக்கியம்

    குடும்பம் தான் முக்கியம்

    தானேவில் இருந்து கர்நாடகாவின் குல்பர்காவுக்கு நேற்று சில பேருந்துகளை நடிகர் சோனு சூட் கையசைத்து தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இது போன்ற நெருக்கடியான நேரங்களில் குடும்பத்துடன் அவர்கள் இருப்பது தான் அவர்களுக்கு தைரியத்தை கொடுக்கும் என நம்புகிறேன். இது ஒரு சிறு உதவி தான் என்றும், அனுமதி அளித்த இரு மாநில அரசுகளுக்கும் நன்றி எனக் கூறினார்.

    English summary
    Actor Sonu Sood has arranged buses for hundreds of migrants stuck in the city amid the nationwide lockdown due to the coronavirus pandemic. The actor has sponsored the travel and meal kits for the migrants.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X