twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    அனுமதி இன்றி ஓட்டல் நடத்துகிறேனா? சட்டத்தை மதிப்பவன்.. மாநகராட்சி புகாருக்கு சோனு சூட் மறுப்பு..

    By
    |

    சென்னை: அனுமதி பெற்றே குடியிருப்பு பகுதியில் ஓட்டல் கட்டியிருப்பதாக பிரபல நடிகர் சோனு சூட் கூறியுள்ளார்.

    Recommended Video

    Acharya படபிடிப்பில் நடிகர் Chiranjeeve செய்த காரியம் | Sonu Sood Opens Up

    தமிழில், விஜயகாந்த் நடித்த கள்ளழகர் படம் மூலம் நடிகராக அறிமுகமானவர், நடிகர் சோனு சூட்..

    தொடர்ந்து, மஜ்னு, சந்திரமுகி, ஒஸ்தி, தேவி உட்பட பல படங்களில் வில்லனாக நடித்தார்.

    சிக்கிக் கொண்டனர்

    சிக்கிக் கொண்டனர்

    தமிழ், தெலுங்கு, இந்தி படங்களில் நடித்து வரும் அவர், கொரோனா காலகட்டத்தில் ஹீரோவாக உயர்ந்தார். அதாவது, கொரோனாவுக்காக கடந்த மார்ச் மாத இறுதியில் திடீரென லாக்டவுன் பிறப்பிக்கப்பட்டதை அடுத்து, பொதுமக்கள் நிலைகுலைந்தனர். பலர் பல்வேறு பகுதிகளில் சிக்கிக் கொண்டனர்.

    உதவி செய்தார்

    உதவி செய்தார்

    ரயில், பேருந்து, விமான போக்குவரத்துகள் நிறுத்தப்பட்டதால், புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர் செல்ல முடியாமல் தவித்தனர். பணம் இல்லாமலும் சாப்பாட்டுக்கு வழியில்லாமலும் கஷ்டப்பட்டனர். இந்நிலையில், சோனு சூட், தொழிலாளர்கள் சொந்த ஊர் செல்ல, உதவி செய்து வந்தார்.

    மனிதாபிமான செயல்

    மனிதாபிமான செயல்

    கொரோனா நோயாளிகளை காப்பாற்றப் பாடுபடும் மருத்துவர்கள், நர்ஸ்கள் மற்றும் மருத்துவ ஊழியர்கள் ஓய்வெடுக்க, தனது ஓட்டலை கொடுத்தார். அவருடைய மனிதாபிமான செயலை, இந்தியா முழுவதும் மக்கள் பாராட்டினர். சமூக வலைத்தளங்களில் அவரை புகழ்ந்து தள்ளினர். அவர் வில்லன் அல்ல, நிஜ ஹீரோ என்றும் கூறினர்.

    உதவித்தொகை

    உதவித்தொகை

    அவர் இப்போதும் தொடர்ந்து உதவிகள் செய்து வருகிறார். பொருளாதார ரீதியில் கஷ்டப்படும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் புதிய திட்டத்தையும் தொடங்கினார். அவர் காட்டிய மனிதாபிமானம் மற்றும் உதவிகளைப் பாராட்டி தெலங்கானாவில் அவருக்குக் கோயில் கட்டியுள்ளனர்.

    லவ் அண்ட் லட்

    லவ் அண்ட் லட்

    இந்நிலையில், மும்பையில் ஜூஹூ பகுதியில் அவர் நடத்தி வரும் ஓட்டல், குடியிருப்பு பகுதியில் இயங்கி வருகிறது. இந்தக் கட்டிடம் குடியிருப்புக்காக அனுமதி பெறப்பட்டது என்றும் அதில் ஓட்டல் நடத்த அனுமதி பெறவில்லை என்றும் மும்பை மாநகராட்சி அதிகாரிகள் கூறியுள்ளனர்.

    முறையான அனுமதி

    முறையான அனுமதி

    இதையடுத்து அனுமதியின்றி ஓட்டலாக மாற்றியதாக, நடிகர் சோனு சூட் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். போலீசார் அவர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதுபற்றி நடிகர் சோனு சூட்டிடம் கேட்டபோது, முறையான அனுமதி பெற்றுதான் ஓட்டல் இயங்கி வருகிறது என்றார்.

    முறைகேடு இல்லை

    முறைகேடு இல்லை

    அவர் மேலும் கூறும்போது, 'மும்பை மாநகராட்சியில் அனுமதி பெற்றுவிட்டேன். மும்பை கடற்கரை மண்டல மேலாண்மை ஆணையத்தில் ஒப்புதல் பெற வேண்டி இருக்கிறது. அதற்கு விண்ணப்பித்திருக்கிறேன். கொரோனா காரணமாக, அனுமதி இன்னும் வரவில்லை. இதில் எந்த முறைகேடும் இல்லை.

    புகாரை எதிர்த்து

    புகாரை எதிர்த்து

    நான் சட்டத்தை மதிப்பவன். அனுமதி கிடைக்காவிட்டால், அதை மீண்டும் குடியிருப்பு பகுதியாக மாற்றுவேன். கொரோனா காலகட்டத்தின் போது கொரோனாவுக்காக போராடிய மருத்துவர்கள் மற்றும் சுகாதார பணியாளர்கள் தங்கிய இடம் அது. மும்பை மாநகராட்சியின் புகாரை எதிர்த்து மும்பை ஐகோர்ட்டில் அப்பீல் செய்ய இருக்கிறேன். இவ்வாறு சோனு சூட் கூறியுள்ளார்.

    English summary
    Actor Sonu Sood on Thursday asserted that there are no irregularities in the sustainability of his Juhu residential complex.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X