twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    நாடு முழுவதும் 18 இடங்களில் ஆக்சிஜன் ஆலைகளை தொடங்கும் நடிகர் சோனு சூட்... ஏழைக்கு வினியோகம்!

    |

    மும்பை: இந்தியத் திரையுலகில் மிகப் பிரபலமான நடிகராக வலம் வரும் சோனு சூட் கொரோனா காலத்தில் பல்வேறு உதவிகளை செய்து இப்பொழுது மக்கள் மத்தியில் சூப்பர் ஹீரோவாக மாறியுள்ளார்.

    Recommended Video

    Sonu Sood அடுத்த பிரதமராக வேண்டும்? | ரசிகர்களுக்கு Sonu Sood கொடுத்த பதில்

    கொரோனா முதல் அலை வந்தபோதே புலம்பெயர் தொழிலாளர்களை அவர்களது சொந்த ஊருக்கு சொந்த அளவில் அனுப்பி வைத்து பலரது பாராட்டுகளையும் பெற்றார்.

    ட்விட்டரில் இணைந்தவுடன் விருதுகளை பட்டியலிட்ட இயக்குனர் சாந்தகுமார்! ட்விட்டரில் இணைந்தவுடன் விருதுகளை பட்டியலிட்ட இயக்குனர் சாந்தகுமார்!

    இப்பொழுது இரண்டாவது அலையிலும் பல்வேறு உதவிகளை செய்து வரும் சோனு சூட் நாடு முழுவதும் 18 ஆக்சிஜன் ஆலைகளை திறக்க உள்ளதாக அறிவித்துள்ளார்.

    ஆக்சிஜன் இல்லாமல்

    ஆக்சிஜன் இல்லாமல்

    உலகம் முழுவதும் மிகப்பெரிய பிரச்சனையாக விளங்கி வரும் கொரோனா இந்தியாவையும் விட்டு வைக்காமல் தொடர்ந்து பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா முதல் அலை ஓய்ந்து ஓரிரு மாதங்களிலேயே இரண்டாவது அலை வீரியத்துடன் உருவாகி லட்சக் கணக்கில் உயிர் சேதங்களை ஏற்படுத்தி மக்களை பெரும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது. அதுபோக ஆக்சிஜன் தேவையும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்வதால் பலரும் ஆக்சிஜன் இல்லாமல் இறக்கும் செய்திகள் தினம்தோறும் வந்து கொண்டுள்ளன.

    ஆக்சிஜன் ஆலைகள்

    ஆக்சிஜன் ஆலைகள்

    ஆக்சிஜன் பற்றாக்குறையை போக்க அரசு சார்பில் பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு வந்தாலும் திரைப் பிரபலங்கள் பலரும் தாமாக முன்வந்து பல நிதி உதவிகளை செய்து வரும் நிலையில் நடிகர் சோனு சூட் தனது சொந்த செலவில் ஆக்ஸிஜன் உள்ளிட்ட பல உதவிகளை செய்து வருவது பலரும் அறிந்ததே. இந்த நிலையில் தொடர் ஆக்ஸிஜன் பற்றாக்குறையை போக்க நாடு முழுவதும் ஆக்சிஜன் ஆலைகள் திறப்பது பற்றிய புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளார்.

    ஆக்ஸிஜன் பற்றாக்குறை

    ஆக்ஸிஜன் பற்றாக்குறை

    அந்த அறிவிப்பில் கடந்த சில மாதங்களாகவே இந்தியாவில் அனைவரும் சந்தித்து வருவது ஆக்ஸிஜன் பற்றாக்குறை. இதற்காக நானும் எனது குழுவும் பல்வேறு உதவிகளை செய்து முடிந்தவரை அதை செயல்படுத்தியும் வருகிறோம். இப்போது அர்ஜுன் உற்பத்திக்கு தேவைப்படும் ஆலைகளை தொடங்க உள்ளோம். அதன்படி இந்தியா முழுவதும் பல்வேறு இடங்களில் ஆலைகளை தொடங்க முடிவு செய்துள்ளோம்.

    5500 படுக்கை

    5500 படுக்கை

    முதலில் ஆந்திர பிரதேசத்தில் குர்நூல், நெல்லூர் மற்றும் கர்நாடக மாநிலம் மங்களூர் ஆகிய இடங்களில் தொடங்க உள்ளோம். அதைத் தொடர்ந்து தமிழ்நாடு, கர்நாடகா, பஞ்சாப்,உத்தரகாண்ட்,தெலுங்கானா, மகாராஷ்டிரா, ராஜஸ்தான்,உத்திர பிரதேஷ், பிஹர்,மத்திய பிரதேஷ் உள்ளிட்ட பல மாநிலங்களில் 18 இடங்களில் ஆக்ஸிஜன் ஆலைகள் தொடங்க உள்ளோம் இது 5500 படுக்கை வசதிகளுக்கு தேவையானதாக இருக்கும்.

    அடுத்த மாதமே உற்பத்தி

    அடுத்த மாதமே உற்பத்தி

    இரண்டாவது அலையைத் தொடர்ந்து மூன்று மற்றும் நான்காவது அலைகளும் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே அடுத்த மாதமே ஆலைகளில் இருந்து ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் வேலைகள் தொடங்கப்படும் . இது முழுக்க முழுக்க ஏழைகளுக்கு சென்றடையும் வகையில் வழிவகை செய்யப்படும் என சோனு சூட் தெரிவித்திருக்க இந்த மகிழ்ச்சியான செய்தி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று பாராட்டுகளை பெற்று வருகிறது.

    English summary
    Hindi actor Sonu Sood to launch Oxygen plants in 18 places.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X