»   »  அஜித்தின் விவேகம்... இசை உரிமையைக் கைப்பற்றியது சோனி!

அஜித்தின் விவேகம்... இசை உரிமையைக் கைப்பற்றியது சோனி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

அஜித்தின் விவேகம் பட இசை வெளியீட்டு உரிமையை சோனி நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

தொடர்ந்து அஜித் படங்களின் இசை உரிமையை வாங்கி வருகிறது சோனி நிறுவனம்.


இதற்கு முன் 'மங்காத்தா', 'பில்லா 2', 'ஆரம்பம்', 'என்னை அறிந்தால்' மற்றும் 'வேதாளம்' ஆகிய படங்களின் இசை உரிமையை சோனி நிறுவனம் கைப்பற்றியுள்ளது. வீரம் இசையை ஜங்லி நிறுவனம் வெளியிட்டது.


தற்போது அஜித் நடிப்பில் உருவாகி வரும் படம் 'விவேகம்'. சிவா இயக்கியுள்ளார்.


கடும் போட்டி

கடும் போட்டி

'விவேகம்' இசை உரிமையை வாங்க கடும் போட்டி நிலவியது. இதில் கடைசியாக சோனி நிறுவனமே வென்றது. இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பை தங்களுடைய ட்விட்டர் பக்கத்தில் நேற்றிரவு (ஜூன் 13) சோனி நிறுவனம் அறிவித்தது.


அனிருத்

அனிருத்

அனிருத் இசையமைப்பில் உருவாகியுள்ள இப்படத்தில் விவேக் ஓபராய், காஜல் அகர்வால், அக்‌ஷரா ஹாசன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.
ரூ 80 - 90 கோடி

ரூ 80 - 90 கோடி

இந்தப் படத்தை சத்யஜோதி நிறுவனம் ரூ 90 கோடி வரை செலவழித்து உருவாக்கியுள்ளது. இப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது.


ஆகஸ்ட் 10

ஆகஸ்ட் 10

விவேகம் படத்தை ஆகஸ்ட் 10-ம் தேதி வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. அடுத்த படம் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை. பல இயக்குநர்கள் அஜித்தைச் சந்தித்து கதை சொல்லி வருகிறார்கள்.


English summary
Sony acquires Vivegam music Sony Entertainment has acquired the audio rights of Ajith's Vivegam.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil