»   »  இந்தி ரசிகர்களின் மனதையும் கவ்வுமா "சூது கவ்வும்"?.. டைரக்டருக்கு ரூ. 25 கோடி சம்பளமாம்!

இந்தி ரசிகர்களின் மனதையும் கவ்வுமா "சூது கவ்வும்"?.. டைரக்டருக்கு ரூ. 25 கோடி சம்பளமாம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: தமிழில் கடந்த 2013 ம் ஆண்டில் வெளியாகி மாபெரும் ஹிட்டடித்த சூது கவ்வும் திரைப்படம் அடுத்ததாக பாலிவுட் சென்று ஹிந்தி பேசவிருக்கிறது.

இந்தப் படத்தை ஹிந்தி மொழிக்கு தகுந்தவாறு மாற்றி எடுக்க பாலிவுட் இயக்குநர் ரோகித் ஷெட்டி பெற்றிருக்கும் தொகை சுமார் 25 கோடிகள் என்று கூறுகின்றனர்.


இவ்வளவு பெரிய தொகையை இந்தத் தேதி வரையிலும் பாலிவுட்டின் படா இயக்குனர்களே பெற்றதில்லை என்று கூறுகின்றன பாலிவுட் வட்டாரங்கள்.


சூது கவ்வும்

சூது கவ்வும்

நலன் குமாரசாமி இயக்கத்தில் கடந்த 2013 ம் ஆண்டு வெளிவந்து மாபெரும் ஹிட்டடித்த படம் சூது கவ்வும். விஜய் சேதுபதி, சஞ்சிதா ஷெட்டி, ராதா ரவி, பாபி சிம்ஹா, அசோக் செல்வன், கருணாகரன் மற்றும் ரமேஷ் திலக் ஆகியோர் இணைந்து நடித்திருந்த இந்தப் படம் வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றி பெற்றது. 2 கோடி பட்ஜெட்டில் உருவாகி பாக்ஸ் ஆபீஸில் 45 கோடியை அள்ளியது சூது கவ்வும். தற்போது இந்தப் படத்தை ஹிந்தி மொழியில் ரீமேக்க இருக்கின்றனர்.


ரோகித் ஷெட்டி

ரோகித் ஷெட்டி

பாலிவுட்டின் ஹிட் இயக்குநர் ரோகித் ஷெட்டி சூது கவ்வும் படத்தின் ஹிந்தி ரீமேக்கை இயக்கவிருக்கிறார். படத்தின் தயாரிப்பாளர் சங்கீதா அகிர் இந்தப் படத்திற்காக சுமார் 25 கோடியை வாரிவழங்கி இருக்கிறார். இது அதிகமான தொகைதான் ஆனால் ரோஹித் ஷெட்டி இந்தப் படத்திற்கு பொருத்தமாக இருப்பார். ரோஹித்தின் வேலை செய்யும் இயல்பு மற்றும் எல்லோரும் பார்க்கக் கூடிய ஒரு காமெடிப்படம் என்பதால் தான் இவ்வளவு தொகையை கொடுத்து இருக்கிறோம்.


தில்வாலே

தில்வாலே

படம் இப்பொது எழுத்தளவில் இருக்கிறது, இதுவரை நாங்கள் எந்த நடிகரையும் படத்திற்காக அணுகவில்லை. ரோஹித் ஷெட்டி தற்போது ஷாரூக்கான், கஜோல் நடித்துவரும் தில்வாலே படப்பிடிப்பில் இருக்கிறார். அவர் ஹைதராபாத்திலிருந்து திரும்பி வந்ததும் அவர் எல்லாவற்றையும் முடிவு செய்வார் என்று படத்தின் தயாரிப்பாளர் சங்கீதா அகிர் தெரிவித்து இருக்கிறார்.


சென்னை எக்ஸ்பிரஸ்

சென்னை எக்ஸ்பிரஸ்

சென்னை எக்ஸ்பிரஸ், சிங்கம் போன்ற மாபெரும் பிளாக் பஸ்டர் படங்களைக் கொடுத்த ரோஹித் ஷெட்டி தற்போது இயக்கிவரும் படம் தில்வாலே. இந்த வருடம் டிசம்பர் 18 ம் தேதி வெளியாகும் இந்தப் படத்திற்காக மொத்த பாலிவுட் உலகமும் காத்துக் கொண்டிருக்கிறது. அதே நாளில் ரன்வீர் சிங் - தீபிகா படுகோனே நடிப்பில் பாஜிரோ மஸ்தானி படம் வெளியாவது குறிப்பிடத்தக்கது.


ராஜ்குமார் ஹிரானி

ராஜ்குமார் ஹிரானி

பாலிவுட்டின் மற்றொரு பெரிய இயக்குநர் ராஜ்குமார் ஹிரானியின் தேதிகள் கிடைக்காததால் தான் ரோஹித் ஷெட்டிக்கு இந்த அதிர்ஷ்டம் அடித்திருக்கிறது. விரைவில் தொடங்கவிருக்கும் இந்தப் படத்தில் பாலிவுட்டின் இளம் நடிகர்கள் பலரும் இணைந்து நடிக்க விருக்கிறார்களாம்.


English summary
Dilwale Director Rohit Shetty gets of Rs 25 crore to direct the remake of Tamil movie Soodhu Kavvum. Soodhu Kavvum was a 2013 Tamil Black comedy movie, directed by Nalan Kumarasamy.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil