சீக்கிரம் முழு பைத்தியம் ஆகிடுவேன்... புலம்பும் தாமரை
சென்னை : பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் 25 வது நாளான இன்றைய எபிசோட்டில் 24 வது நாள் இரவு நடைபெற்ற நிகழ்ச்சியிலிருந்து காட்டப்பட்டது. இதில் இரவு விளக்குகள் அணைக்கப்பட்ட பிறகு ஹவுஸ்மெட்கள் அனைவரையும் அழைத்து, தன்னை கேட்காமல் யாரும் சமைக்கக் கூடாது என்கிறார் இசைவாணி.
காயின் வைக்காத போது யாரும் சமைக்க வேண்டாம் என அனைவரிடமும் கூறுகிறார். இதைக் கேட்டு விட்டு, படுக்கை அறைக்கு சென்று நிரூப், தாமரை ஆகியோர் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அப்போது கரப்பான் பூச்சி தொல்லை தாங்க முடியவில்லை. தூங்குற சமயத்தில் கூப்பிட்டு வைத்து பேசுகிறார் என்கிறார் என நியூப்பிடம் சொல்கிறார் தாமரை.

பாதி பைத்தியம் ஆகிட்டேன்
அப்போது நிரூப், என்ன அக்கா பண்ண போகிறீங்க என கேட்கிறார் தாமரையிடம். அதற்கு பதிலளிக்கும் தாமரை, ஏதாவணு புண்ணியமாக பண்ணுங்கப்பா. எதை பண்ணுவதாக இருந்தாலும் என்னை அனுப்பி விட்டு பண்ணுங்க. நான் ஏற்கனவே பாதி பைத்தியம் ஆகி விட்டேன். உனக்கு தெரியவில்லையா.

புலம்பும் தாமரை
இப்போது வரை பாதி பைத்தியம் ஆகி விட்டேன். இன்னும் கொஞ்ச நாள் இங்கு இருந்தால் முழு பைத்தியம் ஆகி குடும்பம், பிள்ளைகளை மறந்து விடுவேன் என புலம்புகிறார். இதைக் கேட்டு நிரூப் உள்ளிட்ட அனைவரும் சிரிக்கிறார்கள்.

தண்டனை முடிந்தது
பிக்பாஸ் நிகழ்ச்சியின் 25 வது நாள் காலை, கார்டனில் தண்டனை அனுபவித்த பாவனி மற்றும் மதுமிதாவின் தண்டனை முடிந்து வீட்டிற்குள் செல்ல பிக்பாஸ் அனுமதி அளிக்கிறது. அவர்களுடன் இருக்கும் இசைவாணியும் இரவு முழுவதும் தூங்காமல் இருந்துள்ளார்.

யாருக்கு என்ன அதிகாரம்
வீட்டில் உள்ள அனைவருக்கும் இசைவாணிக்கு என்ன அதிகாரம், வீட்டின் கேப்டனாக இருக்கும் மதுமிதாவிற்கு என்ன அதிகாரம் என்ற சந்தேகம் வருகிறது. இது தொடர்பாக ஹவுஸ்மெட்கள் விவாதிக்கிறார்கள். அதே சமயம் பாத்ரூம் பகுதியில், மதுமிதா - இசைவாணி இடையே வாக்குவாதம் நடக்கிறது.

மதுமிதா வாக்குவாதம்
மதுமிதா, இசைவாணியிடம் சென்று நீ சொல்வதை நான் கேட்கிறேன். நான் சொல்வதை ஏன் நீ கேட்க மாட்டேன் என்கிறாய். உன்னால் எத்தனை முறை வீட்டில் நாய் குறைக்கிறது என்கிறார். தொடர்ந்து சிறிது நேரத்தில் மீண்டும் இசைவாணி தூங்கும் போது நாய் குறைக்கிறது. அப்போது அங்கு வரும் பாவனி மற்றும் மதுமிதா, நீ செய்வது தவறு என்கின்றனர்.

இசைவாணியை திட்டும் மதுமிதா
நீ எத்தனை முறை தூங்கி, வீட்டில் நாய் குறைக்கிறது. உன்னால் எல்லோருக்கும் சிக்கல். எங்களை விட நீ அதிக நேரம் தான் தூங்குகிறாய். நான் சொல்வதை ஏன் நீ கேட்க மாட்டேன் என்கிறாய் என மதுமிதா மிக காட்டமாக இசைவாணியிடம் பேசுகிறார்.


Click it and Unblock the Notifications











