ஆர்ஜே பாலாஜிக்கு ஜோடியாகும் அபர்ணா பாலமுரளி… விரைவில் படப்பிடிப்பு !

சென்னை : ஆர்ஜே பாலாஜியுடன் சூரைப்போற்று நடிகை அபர்ணா பாலமுரளி ஜோடியாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

சத்யராஜ், ஊர்வசி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு பொள்ளாச்சியில் விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கவனத்தை ஈர்த்தார்

கவனத்தை ஈர்த்தார்

ஆர் ஜே வாக இருந்த ஆர்ஜே பாலாஜி தமிழ் சினிமாக்களை பங்கமாக கலாய்த்து விமர்சனங்கள் செய்தவர். அதன் பின்னர் அவரே தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக அறிமுகமாகி அனைவரின் கவனத்தை ஈர்த்தார்.

இயக்குனராக

இயக்குனராக

இதையடுத்து, எல்கேஜி திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து இருந்தார். நயன்தாராவை வைத்து மூக்குத்தி அம்மன் திரைப்படத்தை இயக்கினார். இந்த திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து பல திரைப்படங்களில் கதாநாயகனாக நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.

தமிழில் ரீமேக்

தமிழில் ரீமேக்

இந்தியில் மிகப்பெரிய வெற்றி பெற்ற 'badhaai ho' படத்தை தமிழில் ரீமேக் செய்வதற்கான வேலைகள் சுறுசுறுப்புடன் நடந்து வருகிறது. இதில் ஆயூஷ்மான் நடித்த கேரக்டரில் ஆர்.ஜே.பாலாஜி நடிக்க உள்ளார். இந்த அறிவிப்பு கடந்த மாதம் வெளியானது.

ஆர்ஜே பாலாஜிக்கு ஜோடி

ஆர்ஜே பாலாஜிக்கு ஜோடி

இந்நிலையில் சூரரைப்போற்று படத்தில் நடித்த அபர்ணா பாலமுரளி இப்படத்தில் ஆர்ஜே பாலாஜிக்கு ஜோடியாக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் சத்யராஜ் அப்பா வேடத்திலும, ஊர்வசி அம்மா வேடத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு பொள்ளாச்சியில் தொடங்க உள்ளது. இப்படத்தை போனி கபூர் தயாரிக்க உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X