சிவகார்த்திகேயனை திக்குமுக்காட வைத்த சூரி குடும்பத்தினர்...அப்படி என்ன தான் செய்தார்கள் ?
சென்னை : சிவகார்த்திகேயனும் சூரியும் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக வளர்ந்துள்ளனர். விஜய் டிவியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக வாழ்க்கையை துவக்கிய சிவகார்த்திகேயன், படிப்படியாக வளர்ந்து இன்று டாப் ஹீரோ ஆகி உள்ளார்.
Recommended Video
அதே போல் சூரி, வெண்ணிலா கபடிக்குழு படத்தில் புரோட்டா சாப்பிட்டு, காமெடி செய்து பிரபலமானார். இதனால் ஆரம்பத்தில் புரோட்டா சூரி என்று அழைக்கப்பட்டவர், பிறகு முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவரானார். பிறகு இரண்டாவது ஹீரோ அளவிலான ரோல்களில் நடித்தார். தற்போது டைரக்டர் வெற்றிமாறன் இயக்கும் விடுதலை படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாக உள்ளார்.

சூப்பர்ஹிட் காம்போ
சிவகார்த்திகேயனும், சூரியும் பல படங்களில் இணைந்து நடித்துள்ளனர். இவர்களின் காம்போ என்றாலே அந்த படம் செம ஹிட், செம காமெடி என்டர்டைன்மென்ட் என சொல்லும் அளவிற்கு பெயர் வாங்கினர். வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன், சீமராஜா போன்ற பல படங்களில் இவர்கள் இணைந்து நடித்துள்ளனர்.

நட்பை தொடரும் நடிகர்கள்
சமீப காலமாக இவர்கள் இணைந்து நடிக்காததால், இருவருக்கும் இடையே உரசல் ஏற்பட்டுள்ளதாக தகவல் பரவியது. ஆனால் சினிமாவில் மட்டுமல்ல நிஜ வாழ்க்கையிலும் சிவகார்த்திகேயன் மற்றும் சூரி ஆகியோர் தங்களின் நட்பை தொடர்ந்து வருகின்றனர். சமீபத்தில் மதுரையில் நடந்த சூரியின் இல்ல திருமண விழாவில் சிவகார்த்திகேயன் கலந்து கொண்டார்.

வீடியோவில் புத்தாண்டு வாழ்த்து
இந்நிலையில் புத்தாண்டை முன்னிட்டு ரசிகர்களுக்கு வாழ்த்து சொல்லி, சிவகார்த்திகேயன் இன்ஸ்டாகிராமில் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அவரைத் தொடர்ந்து சூரியும் வாழ்த்து வீடியோவை பகிர்ந்தார். இந்த இரண்டு வீடியோக்களுமே ரசிகர்களிடம் ஆயிரக்கணக்கில் லைக்குகளை பெற்றன.

அசர வைத்த சூரி குடும்பத்தினர்
புத்தாண்டு என்பதால் சிவகார்த்திகேயனை தனது வீட்டிற்கு அழைத்து உபசரித்துள்ளார் சூரி. சூரியின் குடும்பத்தினரும் சிவகார்த்திகேயனுக்கு தடபுடல் விருந்து கொடுத்து திக்குமுக்காட வைத்துள்ளனர். சூரி குடும்பத்தினருடன் அமர்ந்து சிவகார்த்திகேயன் உணவு சாப்பிடும் வீடியோ தற்போது வெளியாகி உள்ளது. சூரி குடும்பத்தினருடன் சிவகார்த்திகேயன் எடுத்துக் கொண்ட ஃபோட்டோக்களும் ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.


Click it and Unblock the Notifications











