»   »  இந்த வருஷம் 'தல' தீபாவளி கொண்டாடத் தயாராகும் சூரி

இந்த வருஷம் 'தல' தீபாவளி கொண்டாடத் தயாராகும் சூரி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: அஜீத்துடன் முதன்முறையாக நடித்துள்ள ‘தல 56' படம் ரிலீசாவதால், இந்த வருட தீபாவளி தனக்கு ‘தல தீபாவளி' எனக் கூறி வருகிறார் சூரி.

சிவா இயக்கத்தில் அஜீத் நடித்து வரும் இன்னும் பெயரிடப் படாத படம் ‘தல 56' எனக் குறிப்பிடப் பட்டு வருகிறது. இப்படத்தில் அஜீத்தின் ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடித்துள்ளார். அஜீத்தின் தங்கையாக லட்சுமிமேனன் நடித்துள்ளார். முதன்முறையாக இப்படத்தில் அஜீத்துடன் காமெடி நடிகர் சூரி நடித்துள்ளார்.

இப்படத்தின் வசனப் பகுதிகள் முழுமையாக படமாக்கப்பட்டுவிட்டன. தற்போது போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் நடந்து வருகிறது.

தீபாவளி ரிலீஸ்...

தீபாவளி ரிலீஸ்...

இந்தப் படத்தின் தலைப்பு வரும் விநாயகர் சதுர்த்தியன்று வெளியாகும் எனத் தெரிகிறது. படத்தை தீபாவளிக்கு வெளியிடப் போவதாக தயாரிப்பாளர் ஏஎம் ரத்னம் அறிவித்துள்ளார்.

தல தீபாவளி...

தல தீபாவளி...

இந்நிலையில் முதன்முறையாக அஜீத்துடன் ஜோடி சேர்ந்துள்ள இப்படம் தீபாவளிக்கு ரிலீசாவதால், இந்த தீபாவளியை ‘தல தீபாவளி' எனக் கூறுகிறார் சூரி.

கனவு...

கனவு...

அஜீத்துடன் நடிக்க வேண்டும் என்பது சூரிக்கு மட்டுமல்ல, அவரது குடும்பத்தினருக்கே பல வருட கனவாம். தல 56 படம் மூலம் தங்களது கனவை நிறைவேற்றிக் கொடுத்ததற்காக இயக்குநர் சிவாவுக்கு தனது நன்றிகளைத் தெரிவித்துள்ளார் சூரி.

கை நிறைய படங்கள்...

கை நிறைய படங்கள்...

இது தவிர ‘பாயும் புலி', ரஜினி முருகன்', ‘இது நம்ம ஆளு', ‘அரண்மனை 2' என சூரி கை நிறைய படங்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
The Comedy Actor Soori has said that coming Deepavali will be his Thala deepavali, as Thala 56 is releasing on that day.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil