»   »  நம்மூர் பஸ் மாதிரி வராதுப்பா!- நடிகர் சூரி அம்மாவின் முதல் விமானப் பயண அனுபவம்!!

நம்மூர் பஸ் மாதிரி வராதுப்பா!- நடிகர் சூரி அம்மாவின் முதல் விமானப் பயண அனுபவம்!!

Posted By:
Subscribe to Oneindia Tamil

பக்கா கிராமத்து ஆசாமி நகைச்சுவை நடிகர் சூரி. நடிக்க வந்த பிறகு தன்னை அப்டேட் செய்து கொண்டவர், வாட்ஸ்ஆப், ட்விட்டர், பேஸ்புக் என சமூக வலைத் தளப் பயன்பாடுகளில் கலக்க ஆரம்பித்துவிட்டார்.

இன்று கிட்டத்தட்ட ஹீரோ ரேஞ்சுக்கு வந்துவிட்ட அவர் வசதியாக இருந்தாலும், ஏழ்மையான சாதாரண குடும்பத்தில் பிறந்த பின்னணியை மறக்கவில்லை.

சூரியின் தாயார் இதுவரை விமானப் பயணம் மேற்கொண்டது இல்லை. நடிகர் சூரிக்கு தனது தாயாரை ஒரு நாளாவது விமானத்தில் அழைத்து சென்று விட வேண்டுமென்ற ஆசை. தனது தயாரிடம் பேசி அவரை விமானத்தில் அழைத்து செல்ல முடிவு செய்தார்.

சூரியும் அவரது தாயாரும் விமானத்தில் அருகருகே அமர்ந்து பயணம் மேற்கொண்டனர். அதனை புகைப்படமாக எடுத்து சூரி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவுட்டுள்ளார். பயணத்தின் போது, ''அம்மா விமானப்பயணம் எப்படியிருக்குதுனு சூரி கேட்க... என்ன இருந்தாலும் நம்ம ஊர் பஸ் போல வராதுப்பானு," பதில் சொன்னாராம்.

இதற்கு சூரி அடித்த கமெண்ட்.. 'அம்மாவின் பதிலைக் கேட்ட பைலட் தெறிச்சு ஓடிட்டார்ல!'

Read more about: soori, mother, சூரி
English summary
Actor Soori has shared his mother's first experience in Flight.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil