»   »  சூப்பர் பங்கு... 5 கோடியோட வாங்க .. ஏர்வேஸ் ஆரம்பிக்கலாம்.. சூரியைக் கலாய்த்த சிவகார்த்திகேயன்!

சூப்பர் பங்கு... 5 கோடியோட வாங்க .. ஏர்வேஸ் ஆரம்பிக்கலாம்.. சூரியைக் கலாய்த்த சிவகார்த்திகேயன்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தனது அம்மாவுடன் விமானத்தில் பயணம் செய்த அனுபவத்தைப் பகிர்ந்து கொண்ட சூரியை, வாங்க பங்கு ஏர்வேஸ் ஆரம்பிக்கலாம் என்று கலாய்த்து மகிழ்ந்திருக்கிறார் சிவகார்த்திகேயன்.

மனம் கொத்திப் பறவை, வருத்தப்படாத வாலிபர் சங்கம், கேடி பில்லா கில்லாடி ரங்கா, ரஜினிமுருகன் என்று சிவகார்த்திகேயனின் திரைப் பயணத்தில் நடிகர் சூரிக்கும் ஒரு முக்கிய பங்குண்டு.

இந்நிலையில் தனது அம்மாவின் நீண்ட நாள் ஆசையை நிறைவேற்ற, சமீபத்தில் அவரை விமானத்தில் அழைத்துச் சென்றிருக்கிறார் சூரி.

Soori Share his Mother First Flight Trip

அந்த விமானப் பயணம் குறித்து அவரது அம்மா கூறிய கருத்தை, சூரி தனது ட்விட்டர் பக்கத்தில் புகைப்படத்துடன் பகிர்ந்து கொண்டிருக்கிறார்.

சூரியின் இந்த பதிவுக்கு நடிகர் சிவகார்த்திகேயன் "சூப்பர் பங்கு அடுத்து ரஜினிமுருகன் ஏர்வேஸ் ஆரம்பிக்கிறோம் இந்த தடவை வீட்ல ரூ 5 கோடி வாங்கித் தாங்க" என்று கலாட்டா செய்தார்.

பதிலுக்கு சூரி '5 கோடி என்ன 50 கோடி கூட தரேன் ஆனா நான்தான் கண்டக்டர்' என்று கவுண்டர் கொடுத்திருக்கிறார்.

இதே போல சூரி, சிவகார்த்திகேயனின் ட்வீட்டுகளுக்கு ரசிகர்களும் தங்கள் பாணியில் உற்சாகமாக பதிலளித்து வருகின்றனர்.

English summary
Soori Shared His Mother's First Flight Trip Experience in Twitter Page.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil