சிவகார்த்திகேயன் யாருடன் பிறந்தநாள் கொண்டாடியிருக்கிறார் தெரியுமா?
சென்னை : சிவகார்த்திகேயனின் பிறந்த நாளை முன்னிட்டு ரசிகர்கள், பிரபலங்கள் என பலருக்கும் அவருக்கு வாழ்த்து கூறி வரும் நிலையில், முக்கிய பிரபலம் ஒருவர் சிவகார்த்திகேயன் தன்னுடன் கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடிய போட்டோக்களை பகிர்ந்து லைக்குகளை அள்ளி வருகிறார்.
விஜய் டிவியின் தொகுப்பாளராக இருந்து சினிமாவிற்குள் என்ட்ரி கொடுத்தவர் சிவகார்த்திகேயன். ஆரம்பத்தில் காமெடி ஹீரோவாக கலக்கி ரசிகர்களை கவர்ந்த சிவகார்த்திகேயன், இன்று அதிரடி ஆக்ஷன் ஹீரோவாக மாறி ரசிகர்களின் மனதில் டானாக இருந்து வருகிறார். இவரின் ஜாலியான செயல்பாடுகள் பலருக்கும் இவரை ஃபேவரைட் ஹீரோவாக ஆக்கி உள்ளது.

செம காமெடி காம்போ
தமிழ் சினிமாவில் சிவகார்த்திகேயனுக்கு நெருக்கமானவர்களில் நடிகர் சூரியும் ஒருவர். இவர்கள் இருவரின் காமெடி காம்போ, ரசிகர்களின் எவர்டைம் ஃபேவரைட். வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன், நம்ம வீட்டு பிள்ளை போன்ற பல படங்களில் இவர்கள் இருவரின் காம்போ, தொடர்ந்து பிளாக் பஸ்டர் வெற்றிகளை தந்துள்ளது. தற்போது டான் படத்திலும் இந்த கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது.

நிஜத்திலும் அழகான நட்பு
சினிமாவில் மட்டுமல்ல நிஜ வாழ்க்கையிலும் இவர்களின் நட்பு தொடர்ந்து வருகிறது. இவர்களின் உறவு, நட்பு பலரையம் ஆச்சரியப்பட வைத்து வருகிறது. சமீபத்தில் சூரி, சிவகார்த்திகேயன் சேர்ந்து கிரிக்கெட் விளையாடியது, சிவகார்த்திகேயனை வீட்டிற்கே அழைத்து தடபுடல் விருந்து கொடுத்து சூரி குடும்பத்தினர் அசத்தியது போன்ற வீடியோக்கள், போட்டோக்கள் இணையத்தில் செம வைரலாகின.

அன்பு தம்பி...செல்ல தம்பி
இந்நிலையில் சிவகார்த்திகேயனின் பிறந்தநாளை முன்னிட்டு இன்ஸ்டாகிராமில் வாழ்த்து பகிர்ந்துள்ள சூரி, என் அன்பு தம்பி செல்ல தம்பிக்கு இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள் என குறிப்பிட்டுள்ளார். அதோடு சிவகார்த்திகேயன் தன்னுடன் இணைந்து கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய போட்டோவையும், சிவகார்த்திகேயனுடன் எடுத்துக் கொண்ட செல்ஃபியையும் பகிர்ந்துள்ளார். சூரி பகிர்ந்த இந்த பதிவிற்கு லைக்குகள் குவிந்து வருகிறது.

குவியும் லைக்குகள்
ரசிகர்கள் பலரும் சிவகார்த்திகேயனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை பகிர்ந்து வருகிறார்கள். இவர்களின் அண்ணன் -தம்பி பாசத்தை பார்க்கும் போது மகிழ்ச்சியாக உள்ளது. அன்பான உறவு என பலரும் இவர்களின் நட்பை பாராட்டி கமெண்ட் செய்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











