எதற்கும் துணிந்தவன் வெற்றியை கொண்டாடும் டீம்...நச்சுன்னு சூரி போட்ட அசத்தல் போஸ்ட்

சென்னை : எதற்கும் துணிந்தவன் படத்திற்கு மக்கள் கொடுத்திருக்கும் அமோக ஆதரவை, படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடி உள்ளனர். இதை போட்டோவுடன் பகிர்ந்த சூரி போட்டுள்ள போஸ்டுக்கு லைக்குகள் குவிந்து வருகிறது.

டைரக்டர் பாண்டிராஜ் இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சூர்யா நடித்து வெளிவந்துள்ள படம் எதற்கும் துணிந்தவன். பிரியங்கா அருள் மோகன், சூரி, வினய் ராய், புகழ், சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன் நடித்துள்ள இந்த படம் இன்று தமிழ் உள்ளிட்ட 5 மொழிகளில் உலகம் முழுவதும் ரிலீஸ் செய்யப்பட்டது. முதல் நாளே ரசிகர்களின் பெரும் ஆதரவை பெற்றுள்ளது.

எதற்கும் துணிந்தவன் எப்படி இருக்கு

எதற்கும் துணிந்தவன் எப்படி இருக்கு

ஃபர்ஸ்ட் ஆஃப் முழுக்க முழுக்க குடும்ப என்டர்டைன்மென்ட், செகண்ட் ஆஃப் மாஸ். நல்ல அழுத்தமான மெசேஜ் சொல்லி இருக்கிறார்கள். சூர்யாவின் என்ட்ரி செம. சூர்யாவின் சினிமா கெரியரிலேயே இதுவரை இல்லாத அளவிற்கு மாசான என்ட்ரியாக எதற்கும் துணிந்தவன் படம் உள்ளது என அனைத்து தரப்பினரிடமும் பாராட்டை பெற்றுள்ளது எதற்கும் துணிந்தவன் படம். இது நிச்சயம் பிளாக் பஸ்டர் படமாக அமையும் என அனைவரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

கேக் வெட்டி கொண்டாடிய டீம்

கேக் வெட்டி கொண்டாடிய டீம்

இந்நிலையில் முதல் நாளே படத்திற்கு ரசிகர்கள் அளித்துள்ள பிரம்மாண்ட வெற்றியை எதற்கும் துணிந்தவன் படக்குழுவினர் கேட் வெட்டி கொண்டாடி உள்ளனர். டைரக்டர் பாண்டிராஜிற்கு ஆள் உயர ரோஜாப்பூ மாலையை அணிவித்து, பாராட்டி உள்ளார் நடிகர் சூரி. இந்த போட்டோக்களையும் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

சூரி போட்ட நச்சு ட்வீட்

சூரி போட்ட நச்சு ட்வீட்

அதோடு, இன்றைய காலச்சூழலுக்கு, மிகவும் தேவையான கருத்துள்ள, தாய்மார்கள் கொண்டாடும் படத்தை தந்தமைக்கு அண்ணன் டைரக்டர் பாண்டிராஜிற்கு நெஞ்சார்ந்த நன்றிகள். ஆம்பள பிள்ளைகள் அழகூடாதுன்னு மட்டும் சொல்லி வளர்த்தவுக. இனி பொம்பள பிள்ளைகளை அழ வைக்க கூடாதுன்னு சொல்லி வளர்ப்பாங்க என கேப்ஷன் பதிவிட்டுள்ளார் சூரி.

Recommended Video

Etharkkum Thunindhavan Review | ET Review | Yessa ? Bussa ? | Suriya |Priyanka Arul Mohan|Pandiraj
 ரசிகர்கள் என்ன சொல்றாங்க

ரசிகர்கள் என்ன சொல்றாங்க

சூரியின் இந்த போஸ்டுக்கு லைக்குகள் குவிந்து வருகிறது. படத்தை பாராட்டி பலரும் கமெண்ட் செய்து வருகிறார்கள். சிறந்த படைப்பு, படம் வேற லெவல். பாண்டிராஜிற்கும் உங்களுக்கும் நல்ல கெமிஸ்ட்ரி. சூப்பர் படம் அண்ணா. அண்ணா மாசா பண்ணிருக்கீங்க. அருமையான படத்தை கொடுத்திருக்கீங்க என பலரும் பாராட்டி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X