»   »  "ஜெமினிகணேசனும் சுருளிராஜனும்"... அதர்வாவுடன் கை கோர்த்தார் சூரி!

"ஜெமினிகணேசனும் சுருளிராஜனும்"... அதர்வாவுடன் கை கோர்த்தார் சூரி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் அதர்வா 'ஜெமினிகணேசனும் சுருளிராஜனும்' படத்தில் முதன்முறையாக சூரியுடன் கூட்டணி அமைத்திருக்கிறார்.

சமீபகாலமாக சூரி நடிக்கும் படங்களில் அவரின் காமெடி பெரிதும் பேசப்படுகிறது. குறிப்பாக 'இது நம்ம ஆளு', 'வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்' போன்ற படங்களை இதற்கு எடுத்துக்காட்டாகக் கூறலாம்.

Soori Team Up with Atharvaa in his Next

இதனால் தன்னுடைய அடுத்தடுத்த படங்களில் அவர் மிகுந்த கவனம் செலுத்தி வருகிறார். இதுநாள்வரை நடிகர்களை மட்டும் பார்த்து படங்களைத் தேர்வு செய்த சூரி தற்போது படங்களின் முழுக்கதையையும் கேட்டே சம்மதம் சொல்கிறார்.

அந்தவகையில் இவர் சமீபத்தில் ஒப்புக்கொண்ட படம் 'ஜெமினிகணேசனும் சுருளிராஜனும்'. அதர்வா ஜோடியாக ரெஜினா நடிக்கும் இப்படத்தை ஓடம் இளவரசு இயக்குகிறார்.

இந்நிலையில் முதன்முறையாக இப்படத்தில் அதர்வாவுடன் சேர்ந்து சூரி காமெடி செய்யவிருக்கிறார். தற்போது இதன் முதற்கட்ட படப்பிடிப்பு மதுரை சுற்றுவட்டாரப் பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இதுவரை சீரியஸ் டைப் நாயகனாக நடித்து வந்த அதர்வா இதில் காமெடி நாயகனாக நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

English summary
First Time Soori Join Hands with Atharva in Gemini Ganesanum Surulirajanum.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos