»   »  விஜய், அஜீத் கூட தராத இடத்தைக் கொடுத்த சிம்பு.. நெகிழ்ச்சியில் சூரி!

விஜய், அஜீத் கூட தராத இடத்தைக் கொடுத்த சிம்பு.. நெகிழ்ச்சியில் சூரி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: இது நம்ம ஆளு படத்துக்கு கிடைத்த வரவேற்பால் நாயகன் சிம்புவுக்கு, பரோட்டா சூரி நன்றி சொல்லியிருக்கிறார்.

சிம்பு, நயன்தாரா, சூரி, ஆண்ட்ரியா, ஜெய், சந்தானம் என ஏராளமான நட்சத்திரங்கள் இணைந்து நடித்த இது நம்ம ஆளு, கடந்த வெள்ளிக்கிழமை வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.


குறிப்பாக சூரியின் காமெடிக்கு தியேட்டரில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.


சந்தானம்

சந்தானம்

வழக்கமாக சிம்பு படங்களில் சந்தானம் தான் காமெடி செய்வார். மன்மதன் தொடங்கி வாலு வரை சிம்பு-சந்தானம் கூட்டணி இணைந்தே காமெடி செய்து வந்தது. தற்போது சந்தானம் முழுநீள நடிகராக மாறிவிட்டதால் சந்தானத்திற்குப் பதிலாக சூரியை இப்படத்தில் பாண்டிராஜ் நடிக்க வைத்தார்.


இது நம்ம ஆளு

இது நம்ம ஆளு

இதனால் சூரி-சிம்பு கூட்டணி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெறுமா? என்ற சந்தேகம் அனைவருக்கும் எழுந்தது. மேலும் கிராமத்துக் காமெடியில் கலக்கும் சூரி நகரத்துக் கதைக்கு பொருந்துவாரா? என்ற கேள்வியும் ரசிகர்கள் மத்தியில் எழத் தவறவில்லை. ஆனால் சூரி தன்னுடைய காமெடியால் ரசிகர்களை வெகுவாகவேக் கவர்ந்து விட்டார்.


கவுண்ட்டர்

கவுண்ட்டர்

படம் முழுவதும் சிம்புவுடன் பயணிக்கும் சூரி சிம்பு-நயன் இருவரும் பேசும்போது கொடுக்கும் கவுண்ட்டர்களுக்கு தியேட்டரில் சிரிப்பலைகள் அடங்க வெகு நேரமாகிறது. சண்டைக் காட்சிகள் எதுவும் இல்லாத இப்படத்தை இயல்பாக நகர்த்திச் செல்வதற்கு சூரியின் காமெடி பெரிதும் கைகொடுத்துள்ளது.


வசனங்கள்

வசனங்கள்

'அவனுக்கு பொண்ணுங்கண்ணு எழுதுனாலே புடிக்கும்', என்று சிம்புவைக் கலாய்ப்பது 'ரெண்டு பேரும் அவங்களோட எக்ஸ் லவ்வர் பேரா சொல்றாங்க', என்று சிம்பு-நயன் ரெண்டு பேரையும் சேர்த்துக் கலாய்ப்பது, 'யூ சர்டிபிகேட் படத்தை ஏ சர்டிபிகேட் படமாக்கிடாத' என்று கிடைத்த இடங்களில் எல்லாம் ஸ்கோர் செய்கிறார்.


சிம்புவுக்கு

சிம்புவுக்கு

இந்நிலையில் சிம்புவுக்கு இணையான வரவேற்பு தனக்கும் கிடைத்திருப்பதால் சூரி தற்போது மிகவும் மகிழ்ந்து போயிருக்கிறார். இதுகுறித்து சூரி ''சிம்பு என்ற மாஸ் நடிகருக்கு பக்கத்துல என்னையும் நிற்க வைச்சதுக்கு நன்றி'' என்று நடிகர் சிம்புவுக்கு தன்னுடைய நன்றியைத் தெரிவித்துள்ளார்.


விஜய்-அஜீத்

விஜய்-அஜீத்

முன்னணி நடிகர்களான விஜய்-அஜீத் படங்களில் கூட சூரிக்கு இவ்வளவு முக்கியத்துவம் இருந்ததில்லை. ஆனால் இது நம்ம ஆளு படத்தில் பாண்டிராஜ், சிம்பு இருவரும் படம் முழுவதும் வருகின்ற கதாபாத்திரத்தை சூரிக்கு வழங்கியுள்ளனர். நகரத்துக் காதல் கதையான இது நம்ம ஆளுவில் சூரியின் காமெடிக்கு வரவேற்பு கிடைத்திருப்பதால், கிராமத்துக் காமெடி மட்டுமின்றி நகரத்துக் கதையிலும் சூரி இனி பட்டையைக் கிளப்பப் போவது நிச்சயம்.


ஆக இனி சிம்பு-பாண்டிராஜ் படங்களில் சூரியின் காமெடிக்கும் முக்கியத்துவம் இருக்கும்...English summary
Comedy Actor Soori Thanking to Simbu for Idhu Namma Aalu Opportunity.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil