»   »  தவறான விமர்சனத்திற்கு சாரி, ஆனால் 'பாகுபலி 2' எனக்கு பிடிக்கவில்லை: ட்வீட்டிய விமர்சகர்

தவறான விமர்சனத்திற்கு சாரி, ஆனால் 'பாகுபலி 2' எனக்கு பிடிக்கவில்லை: ட்வீட்டிய விமர்சகர்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: பாகுபலி 2 படம் பற்றி தவறான விமர்சனம் போட்டதற்கு இயக்குனர் ராஜமவுலியிடம் மன்னிப்பு கேட்டுள்ளார் பாலிவுட் விமர்சகர் கேஆர்கே.

பாகுபலி 2 படம் ரிலீஸாகி உலக ரசிகர்களை வியக்க வைத்துள்ளது. படம் இதுவரை உலக அளவில் ரூ. 1,300 கோடிக்கு மேல் வசூலித்துவிட்டது. இந்தியில் பாலிவுட்டின் கான்கள் பட சாதனைகளை முறியடித்துள்ளது பாகுபலி 2.


பிரபாஸை பார்த்து கான்களே மிரண்டு போயுள்ளனர்.


விமர்சனம்

விமர்சனம்

பாகுபலி 2 படத்தை பார்த்த பாலிவுட் விமர்சகர் கேஆர்கே, இது எல்லாம் ஒரு படமா. இனி நான் தென்னிந்திய படங்களை பார்க்கவே மாட்டேன் என்று கடுமையாக விமர்சித்தார்.


பிரபாஸ்

பிரபாஸ்

இத்தனை ஆண்டுகளாக தெலுங்கு நடிகராக இருந்த பிரபாஸ் தற்போது உலக அளவில் மிகவும் பிரபலமாகிவிட்டார். அவருடன் நடிக்க நடிகைகள் போட்டி போடுகிறார்கள்.


ஒட்டகம்

ஒட்டகம்

பிரபாஸுடன் நடிக்க நடிகைகள் போட்டோ போட்டி போடும்போது அவர் ஒட்டகம் போன்று இருப்பதாக தெரிவித்தார் கேஆர்கே. இதனால் பிரபாஸ் ரசிகர்கள் கடுப்பாகி கேஆர்கேவை திட்டித் தீர்த்தார்கள்.


மன்னிப்பு

பாகுபலி 2 படம் இமாலய வெற்றி அடைந்த பிறகு கேஆர்கே ட்வீட்டியிருப்பதாவது, பாகுபலி 2 படம் பற்றிய என்னுடைய தவறான விமர்சனத்திற்கு மன்னிக்கவும். எனக்கு படம் பிடிக்கவில்லை ஆனால் மக்களுக்கு பிடித்துள்ளது. மன்னித்துவிடுங்கள் ராஜமவுலி.


English summary
Bollywood critic KRK tweeted that, 'I m very sorry for my wrong review of #Baahubali2! I didn't like it but ppl like it n Janta Ki Awaaz means Nakkare Khuda. Sorry ssrajamouli'

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil