»   »  சவுந்தர்யாவும், தனுஷும் சேர்ந்து என்னை ஏமாற்றிவிட்டனர்: கஜோல்

சவுந்தர்யாவும், தனுஷும் சேர்ந்து என்னை ஏமாற்றிவிட்டனர்: கஜோல்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சவுந்தர்யாவும், தனுஷும் சேர்ந்து தன்னை ஏமாற்றி விஐபி 2 படத்தில் நடிக்க வைத்துவிட்டதாக பாலிவுட் நடிகை கஜோல் காமெடியாக தெரிவித்துள்ளார்.

பாலிவுட் நடிகை கஜோல் 20 ஆண்டுகள் கழித்து மீண்டும் தமிழ் படத்தில் நடித்துள்ளார். அந்த படம் தனுஷின் விஐபி 2. தனுஷுக்கு வில்லியே கஜோல் தான்.


இந்நிலையில் படம் பற்றி கஜோல் கூறியிருப்பதாவது,


விஐபி 2

விஐபி 2

சவுந்தர்யாவும், தனுஷும் என்னிடம் பொய் சொல்லி ஏமாற்றி விஐபி 2 படத்தில் நடிக்க வைத்துவிட்டனர்(காமெடியாக சொன்னார்). எனக்கு கொஞ்சம் தான் தமிழ் வசனங்கள் என்று கூறினர். ஆனால் ஸ்பாட்டுக்கு வந்த பிறகு ஏகப்பட்ட வசனங்கள்.


வசனம்

வசனம்

நான் தமிழ் வசனங்களை கஷ்டமில்லாமல் பேச சவுந்தர்யாவும், தனுஷும் பெரிதும் உதவி செய்தார்கள். இதற்காக இருவரும் என்னுடன் நேரம் செலவிட்டு நான் கஷ்டப்படாமல் பார்த்துக் கொண்டனர்.


தனுஷ்

தனுஷ்

தனுஷ் ஒரு அருமையான நடிகர். அவருக்கு சீன் போடத் தெரியாது. அவர் திரைக்கதை, வசனம் எழுதியிருந்ததால் அனைத்து காட்சிகளிலும் ஈடுபாடு காட்டினார். நான் விஐபி படத்தை பார்க்கவில்லை. அதனால் எனக்கு அந்த படத்தின் கதையை கூறினார்.


அமுல் பேபி

அமுல் பேபி

ஒரு காட்சியில் தனுஷ் என்னை அமுல் பேபி என்றதும் நான் என்ன அவ்வளவு குண்டாவா இருக்கிறேன் என்று நினைத்தேன். அதன் பிறகே அந்த வார்த்தையின் முக்கியத்துவத்தை எனக்கு புரிய வைத்தனர்.


Dhanush says "Why we didn't commit Anirudh for VIP 2"-Filmibeat Tamil
தமிழ் படங்கள்

தமிழ் படங்கள்

தொடர்ந்து தமிழ் படங்களில் நடிக்க ஆர்வமாக உள்ளேன். நல்ல கதை, கதாபாத்திரம் கிடைத்தால் நிச்சயம் தமிழ் படங்களில் நடிப்பேன் என்று கஜோல் தெரிவித்துள்ளார்.


English summary
Bollywood actress Kajol said in a light manner that Soundarya and Dhanush have conned her into VIP 2 film.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil