»   »  தனுஷ் சார், உங்களிடம் இருந்து நிறைய கத்துக்கிட்டேன், கத்துக்கிட்டே இருக்கேன்: சவுந்தர்யா

தனுஷ் சார், உங்களிடம் இருந்து நிறைய கத்துக்கிட்டேன், கத்துக்கிட்டே இருக்கேன்: சவுந்தர்யா

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் தனுஷ் தன் வழிகாட்டி என்றும் அவரிடம் இருந்து நிறைய கற்றுக் கொண்டிருப்பதாகவும் சவுந்தர்யா ரஜினிகாந்த் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

தனுஷ், அமலா பால், கஜோல் உள்ளிட்டோரை வைத்து சவுந்தர்யா ரஜினிகாந்த் இயக்கி வரும் படம் விஐபி 2. இதில் பாலிவுட் நடிகையான கஜோல் தனது காட்சிகளை நடித்துக் கொடுத்துவிட்டார்.

தனுஷ் வரும் காட்சிகள் நேற்றுடன் படமாக்கப்பட்டு முடிந்துவிட்டது.

ரஜினி

ரஜினி

விஐபி 2 படப்பிடிப்பில் தனது மருமகன் தனுஷுக்கு நேற்று தான் கடைசி நாள் என்பதை தெரிந்து கொண்ட ரஜினி அவருக்கு இன்ப அதிர்ச்சி அளித்தார். அதாவது படப்பிடிப்பு தளத்திற்கு திடீர் என்று ரஜினி வந்தார்.

தனுஷ்

நம் தலைவரின் ஆசீர்வாதத்துடன் விஐபி2 படத்தின் ஷூட்டிங்கை இன்றுடன் முடித்துக் கொண்டேன். அனைத்திற்கும் நன்றி சவுந்தர்யா மற்றும் தாணு சார் என்று ட்வீட்டியுள்ளார் தனுஷ்.

சவுந்தர்யா

தனுஷின் ட்வீட்டை பார்த்த சவுந்தர்யா ட்விட்டரில் கூறியிருப்பதாவது, நன்றி டி சார். நான் உங்களிடம் இருந்து நிறைய கற்றுக் கொண்டேன், கற்றுக் கொண்டிருக்கிறேன்!!! #D34 #என்வழிகாட்டி என தெரிவித்துள்ளார்.

துவக்கம்

துவக்கம்

விஐபி 2 படத்தின் படப்பிடிப்பை கிளாப் அடித்து துவக்கி வைத்ததே ரஜினிகாந்த் என்பது குறிப்பிடத்தக்கது. தனுஷ் இயக்கியுள்ள பவர் பாண்டி வரும் 14ம் தேதி ரிலீஸாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Director Soundarya Rajinikanth who considers Dhanush as her mentor tweeted that she has learnt and is learning a lot from him.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil