Don't Miss!
- News
யம்மாடியோ.. அமெரிக்காவை அலறவிடும் சீன "ராட்சச" பலூன்.. சுட்டு வீழ்த்தவே முடியாதாம்.. நிபுணர்கள் பகீர்
- Sports
களத்தில் இறங்கிய கிங் கோலி.. பயிற்சி முகாமில் நடந்த சுவாரஸ்யம்.. கச்சேரி இம்முறை இருக்கு
- Finance
பிப்.6-8 RBI நாணய கொள்கை கூட்டம்.. மீண்டும் ரெப்போ விகிதம் உயருமா..?
- Automobiles
மாருதி ஷோரூம்ல கூட்டம் குவியுது... எல்லாம் இந்த காரை பாக்கதான்... விற்பனையகங்களுக்கு வர தொடங்கிய ஃப்ரான்க்ஸ்!
- Lifestyle
புதன் பெயர்ச்சியால் பிப்ரவரி 07 முதல் அடுத்த 20 நாட்கள் இந்த 3 ராசிகளின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்..
- Technology
சூரியனில் அதிகரிக்கும் கருப்பு புள்ளிகளால் விஞ்ஞானிகள் பதட்டம்.! சூரிய புயல் அபாயம் உருவாகிறதா?
- Travel
இந்தியாவிலேயே அதிக விருந்தோம்பல் செய்து அவார்ட் வாங்கிய இடம் புதுச்சேரி தானாம்!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
தோனியை வைத்து வித்தியாச முயற்சி... நண்பருக்கு வாழ்த்து சொன்ன சௌந்தர்யா
சென்னை : முன்னாள் இந்திய கேப்டன் தோனியை வைத்து அதர்வா தி ஆரிஜின் என்ற கிராபிக் நாவல் உருவாக்கப்பட்டு வருகிறது.
இதன் மோஷன் போஸ்டரை எம்எஸ் தோனி தனது அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
இந்நிலையில் இந்த நாவலை எழுதிய தனது நண்பர் ரமேஷ் தமிழ்மணிக்கு சௌந்தர்யா ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
10
ஆண்டுகள்..
பாண்டிராஜை
மட்டும்
குறிப்பிட்டு
நன்றி..
சிவகார்த்திகேயனை
திட்டும்
தனுஷ்
ரசிகர்கள்!

முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனி
முன்னாள் இந்திய கேப்டன் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் எம்எஸ் தோனி. இவர் சிறப்பான கேப்டனாக செயல்பட்டு வருகிறார். மேலும் கிரிக்கெட் ரசிகர்கள் மட்டுமின்றி கிரிக்கெட் குறித்து அதிகமாக தெரியாதவர்கள்கூட தோனியை விரும்புகின்றனர்.

பல துறைகளில் கவனம்
கிரிக்கெட் மட்டுமின்றி விவசாயம் உள்ளிட்ட பல்வேறு துறைகளிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு வருகிறார் எம்எஸ் தோனி. இவரது பயோ பிக் வெளியாகி சிறப்பான வரவேற்பை பெற்றது. இவ்வாறு தான் எடுக்கும் அனைத்து முயற்சிகளும் தோனிக்கு சிறப்பாக அமைந்து விடுகிறது.

கிராபிக் நாவல்
இந்நிலையில் இவரைக் கொண்டு வித்தியாசமான புதிய முயற்சியாக கிராபிக் நாவல் உருவாக்கப்பட்டு வருகிறது. இந்த நாவலை எழுதியுள்ளார் ரமேஷ் தமிழ்மணி. விரைவில் தொடங்கப்படவுள்ள இந்த முயற்சிக்கு அதர்வா தி ஆரிஜின் என்று பெயரிடப்பட்டுள்ளது.

மோஷன் போஸ்டர் வெளியீடு
இந்நிலையில் இதன் மோஷன் போஸ்டர் இன்றைய தினம் வெளியிடப்பட்டுள்ளது. இதனை தனது பேஸ்புக் பக்கத்தில் தோனியே வெளியிட்டுள்ளார். மிகவும் கம்பீரமான தோற்றத்தில் தோனி அதில் காணப்படுகிறார். இதில் சூப்பர் ஹீரோவாகவும் அசத்தலான படைத் தலைவராகவும் தோனி காணப்படுகிறார்.

புதிய பரிணாமத்தில் தோனி
இதன்மூலம் ரசிகர்கள் புதிய பரிணாமத்தில் தோனியை பார்க்க முடியும். மிடாஸ் டீல்ஸ் பிரைவேட் லிமிடெட் மற்றும் விர்சு ஸ்டூடியோஸ் இணைந்து இதை உருவாக்கவுள்ளது. காமிக் பிரியர்கள் மற்றும் தோனி ரசிகர்களுக்கு பிடித்தமானதாக இந்த மெகா பட்ஜெட் கிராபிக் நாவல் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

எழுத்தாளர் ரமேஷ் தமிழ்மணி
இந்த நாவலை ரமேஷ் தமிழ்மணி எழுதியுள்ள நிலையில், அவருக்கு சௌந்தர்யா ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தின் மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் தனது நல்ல நண்பர் என்றும் அவருடைய இந்த முயற்சிக்கு வாழ்த்துக்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.