டீசர் லீக்கானதை பொறுத்து கொள்ள முடியாது: சௌந்தர்யா ரஜினிகாந்த் கொதிப்பு
டீசர் லீக்கானதை பொறுத்து கொள்ள முடியாது என்று சௌந்தர்யா ரஜினிகாந்த் கண்டனம் தெரிவித்து டுவிட்டரில் கருத்து பதிவிட்டுள்ளார்.
சென்னை: ரஜினி நடிப்பில் வெளியாகவுள்ள 2.O படத்தின் டீசர் இணையதளத்தில் லீக்கானதை கண்டித்து சௌந்தர்யா ரஜினிகாந்த் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் ரஜினி, அக்ஷய் குமார், ஏமி ஜாக்சன் நடித்து வெளியாகவுள்ள திரைப்படம் 2.0. இந்த படம் ஏப்ரல் மாதம் திரைக்கு வருவதாக இருந்தது.

எனினும் சில தொழில்நுட்ப பணிகள் இருந்ததால் பட வெளியீடு தேதி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக காலா படம் வரும் ஏப்ரல் 27-இல் திரைக்கு வரவிருக்கிறது.
இந்நிலையில் 2.O படத்தின் டீசர் படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக வெளியிடுவதற்கு முன்னரே 1.27 நிமிடங்கள் கொண்ட டீசர் இணையதளத்தில் திருட்டுத்தனமாக வெளியானது.
இதனால் ரசிகர்களும் படக்குழுவினரும் அதிர்ச்சி அடைந்தனர். இந்நிலையில் இதுகுறித்து சௌந்தர்யா ரஜினிகாந்த் கூறுகையில், அதிகாரப்பூர்வ டீசர் வெளியிடுவதற்கு முன்னால் திருட்டுத்தனமாக இணையதளத்தில் வெளியானதை பொறுத்துக் கொள்ள முடியாது, ஊக்குவிக்கவும் முடியாது.
2.O படக்குழுவினரின் கடின உழைப்பு , முயற்சிகள், சில வினாடி குதூகலத்துக்காக டீசரை உருவாக்கியவர்களின் உணர்வுகள் ஆகியவற்றை புறந்தள்ளப்பட்டு மனசாட்சி இல்லாத முயற்சியே இதுவாகும் என்று சௌந்தர்யா தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











