சூப்பர் ஸ்டார் மகளுக்கு பிறந்தநாள்.. கணவர் கொடுத்த சர்ப்ரைஸை பார்த்தீங்களா?.. செளந்தர்யா ஹேப்பி!

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இளைய மகள் செளந்தர்யா ரஜினிகாந்த் இன்று தனது 41வது பிறந்தநாளை கணவருடன் கொண்டாடி வரும் நிலையில், கணவர் பண்ண சர்ப்ரைஸை போட்டோக்களாக வெளியிட்டு வாழ்த்துக்களை பெற்று வருகிறார்.

நடிகர் ரஜினிகாந்த் தமிழ் சினிமாவில் 50 ஆண்டுகளாக முன்னணி ஹீரோவாக வலம் வருகிறார். லதா ரஜினிகாந்தை திருமணம் செய்துக் கொண்ட ரஜினிகாந்துக்கு ஐஸ்வர்யா மற்றும் செளந்தர்யா என 2 மகள்கள் உள்ளனர்.

Soundarya Rajinikanth shares her birthday celebration and husband cute surprise pics
Photo Credit:

மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் நடிகர் தனுஷை திருமணம் செய்துக் கொண்டு வாழ்ந்து வந்த நிலையில், சில ஆண்டுகளுக்கு முன்னர் இருவரும் விவாகரத்து செய்து பிரிந்தனர். ஐஸ்வர்யாவுக்கு முன்னதாகவே செளந்தர்யா ரஜினிகாந்த் தனது முதல் கணவரை விவாகரத்து செய்து பிரிந்து 2வதாக விசாகன் எனும் தொழிலதிபரை திருமணம் செய்துக் கொண்டு சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார்.

செளந்தர்யா ரஜினிகாந்த் பிறந்தநாள்: ரஜினிகாந்த் மற்றும் லதாவுக்கு மகளாக 1984ம் ஆண்டு செப்டம்பர் 20ம் தேதி பிறந்த செளந்தர்யா ரஜினிகாந்த் இன்று தனது 41வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். ரஜினிகாந்தின் இரு மகள்களும் சினிமாவில் ஹீரோயின்களாக ஆகாமல் இயக்குநராக மாறினர். செளந்தர்யா ரஜினிகாந்த் தயாரிப்பு பணிகளையும் கவனித்து வந்தது குறிப்பிடத்தக்கது.

படங்கள் தோல்வி: அப்பா ரஜினிகாந்தின் கோச்சடையான் படத்தையே செளந்தர்யா ரஜினிகாந்த் தான் இயக்கினார். ஆனால், அந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. அதன் பின்னர், தனுஷை வைத்து வேலையில்லா பட்டதாரி 2 படத்தையும் இயக்கினார் அந்த படமும் ஓடவில்லை. வேலையில்லா பட்டதாரி முதல் பாகம் வெற்றிப் பெற்ற நிலையிலும், அதன் 2ம் பாகத்தை செளந்தர்யா இயக்கிய நிலையில், சொதப்பி விட்டது. அதன் பின்னர் இவரும் எந்தவொரு படத்தையும் இயக்கவில்லை. நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தையே செளந்தர்யா ரஜினிகாந்த் இயக்குவதாக இருந்தது. ஆனால், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விவாகரத்துக்குப் பின்னர் அந்த படத்தை தனுஷ் இயக்கினார்.

கணவர் கொடுத்த சர்ப்ரைஸ்: Happy Birthday Wifey என பலூனை எல்லாம் பறக்கவிட்டு பிறந்தநாளை தடபுடலாக சர்ப்ரைஸ் கலந்து கொண்டாடியுள்ளார் விசாகன். அதை பார்த்து சந்தோஷமடைந்த செளந்தர்யா ரஜினிகாந்த் தற்போது கணவருடன் எடுத்துக் கொண்ட போட்டோவையும் தனக்கு கணவர் பண்ண சர்ப்ரைஸ் போட்டோவையும் பகிர்ந்து லிவிங் மை பெஸ்ட் லைஃப் என பதிவிட்டு அப்பா அம்மாவுக்கும் தனது தயாரிப்பு நிறுவனத்துக்கும் ரசிகர்களுக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.

செல்லப்பெயரை சொல்லி ஸ்ரீதேவி வாழ்த்து: நடிகை ஸ்ரீதேவி விஜயகுமார் "ஹேப்பி பர்த்டே மிட்டு" என பதிவிட்டு செளந்தர்யா ரஜினிகாந்தின் செல்லப்பெயரை சொல்லி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும், பல பிரபலங்களும் ரஜினிகாந்த் ரசிகர்களும் செளந்தர்யா ரஜினிகாந்துக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X