For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

  கல்யாணத்துக்கு ஒரு வாரமே உள்ள நிலையில் மற்றொரு ‘குட் நியூஸ்’ சொன்ன ரஜினி மகள்!

  |
  பொன்னியின் செல்வன் நாவலை web series- ஆக எடுக்கும் சவுந்தர்யா ரஜினிகாந்த்- வீடியோ

  சென்னை: பொன்னியின் செல்வன் நாவலை வெப் சீரிஸாக உருவாக்க இருப்பதாக சவுந்தர்யா ரஜினிகாந்த் அறிவித்துள்ளார்.

  சோழப் பேரரசரான அருள்மொழிவர்மனின் வாழ்க்கையைப் பற்றி கல்கி கிருஷ்ணமூர்த்தி எழுதிய சரித்திர நாவல் 'பொன்னியின் செல்வன்'. இது சோழ அரச பரம்பரையின் ஆட்சிக்காலத்தைப் பற்றிய விறுவிறுப்பும், வீரமும், தொன்மையும், காதல் மற்றும் நகைச்சுவை கலந்த காவியம் ஆகும். பல சரித்திரப் படங்கள் நேரடியாக இல்லாவிட்டாலும், மறைமுகமாக இந்த நாவலின் தாக்கத்திலேயே உருவாக்கப்பட்டிருக்கின்றன என்பது மறுக்க முடியாத உண்மை.

  இந்த நாவலை அப்படியே படமாக்குவது பல முன்னணி இயக்குநர்களின் கனவாகவே இருக்கிறது. செக்கச் சிவந்த வானம் படத்தைத் தொடர்ந்து மணிரத்னம் பெரிய நட்சத்திரப் பட்டாளத்தை வைத்து இந்தப் படத்தை இயக்க திட்டமிட்டு, அதற்கான வேலைகளில் ஈடுபட்டிருப்பதாக சமீபகாலமாக ஊடகங்களில் தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன.

  இந்நிலையில், இந்த நாவலை வெப் சீரிஸாக்கப் போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார் நடிகர் ரஜினியின் இளைய மகளான சவுந்தர்யா.

  கனவுத் திட்டம்:

  இதனை தனது டிவிட்டர் பக்கத்தில் அவர் தெரிவித்துள்ளார். அந்தப் பதிவில், "இது எனது கனவு திட்டம்!!! ... இந்த விஷயத்தை வெளிப்படுத்துவதில் அளவற்ற மகிழ்ச்சி. இதற்காக மே 6 எண்டர்டெயிண்ட்மெண்ட் மற்றும் எம் எக்ஸ் பிளேயர் ஆகியோருடன் ஒன்றிணைந்து செயல்பட உள்ளோம்.

  வெப் சீரிஸாகும் காவியம்:

  வெப் சீரிஸாகும் காவியம்:

  வரலாற்றுப் புதினமான பொன்னியின் செல்வன் எம் எக்ஸ் ஒரிஜினல் வெப் சீரிஸாக வெளியாகப் போகிறது. இந்த வலைத்தொடர் தமிழகத்தை ஆட்சி செய்த சோழ அரச பரம்பரையின் ஆட்சிக்காலத்தைப் பற்றிய விறுவிறுப்பும், வீரமும், தொன்மையும், காதல் மற்றும் நகைச்சுவை கலந்த காவியமாக இருக்கும்.

   சூரியபிரதாப் இயக்கம்:

  சூரியபிரதாப் இயக்கம்:

  கடவுள் எங்களை ஆசிர்வதிக்கட்டும். இதற்கு உங்கள் அனைவரின் ஆதரவும் தேவை" என இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார். இத்தொடரைத் தயாரித்து ஆக்கத்தலைமை பொறுப்பை மேற்கொள்கிறார் சௌந்தர்யா. இயக்குநர் கே.எஸ்.ரவிகுமாரின் உதவியாளராக இருந்த சூரியபிரதாப் இயக்கத்தில் உருவாகிறது இத்தொடர். இதில் நடிக்கும் நடிகர்கள் பட்டியல் இன்னும் வெளியாகவில்லை.

  பெருமை:

  பெருமை:

  இது பற்றி எம்.எக்ஸ். பிளேயரின் தலைமை நிர்வாக அதிகாரி கரண்பேடி கூறுகையில், "இணைய உலகில் தடம் பதிக்கும் சவுந்தர்யாவுடன் கைகோர்ப்பதில் பெருமை கொள்கிறோம். அவருடைய தனித்துவமிக்க, பிரமாண்டமான தொலைநோக்குப் பார்வையுள்ள அணுகுமுறை அசாத்தியமாகவுள்ளது. இணைய பார்வையாளர்களை இந்தப் படைப்பு ஈர்க்கப்போவது உறுதி" என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்

  அடுத்தமாதம் திருமணம்:

  அடுத்தமாதம் திருமணம்:

  சவுந்தர்யா ரஜினிக்கு அடுத்த மாதம் 11ம் தேதி திருமணம் நடைபெற உள்ளது. நடிகரும், தொழிலதிபருமான விசாகன் வணங்காமுடியை அவர் மறுமணம் செய்து கொள்ள இருக்கிறார். திருமண வேலைகளுக்கு மத்தியில் தான், பொன்னியின் செல்வன் நாவலை படமாக்க இருப்பதாக ரசிகர்களுக்கு அவர் இன்ப அதிர்ச்சி கொடுத்திருக்கிறார் சவுந்தர்யா.

  English summary
  Superstar Rajinikanth's daughter Soundarya Rajinikanth will be producing a historical series based on the novel Ponniyin Selvan for a streaming platform. Soundarya has partnered with streaming platform MX Player through her May 6 Entertainment to produce a MX Original Series based on the epic novel, read a statement.

  சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Filmibeat sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Filmibeat website. However, you can change your cookie settings at any time. Learn more