கோலாகலமாக நடைபெற்ற சவுந்தர்யா - விசாகன் திருமணம்: யாரெல்லாம் வந்திருந்தாங்க தெரியுமா?
ரஜினி மகள் சவுந்தர்யாவின் திருமணத்தில் முக்கிய பிரபலங்கள் பலர் கலந்து கொண்டுள்ளனர்.
Recommended Video

சென்னை: ரஜினியின் இளைய மகள் சவுந்தர்யா - விசாகன் திருமணத்திற்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உள்பட ஏராளமான முக்கியஸ்தர்கள் நேரில் சென்று மணமக்களை வாழ்த்தினர்.
நடிகர் ரஜினிகாந்தின் இளையமகள் சவுந்தர்யாவிற்கும், தொழிலதிபரும், நடிகருமான விசாகன் வணங்காமுடிக்கும் இன்று சென்னையில் திருமணம் நடைபெற்றது. திருமணக் கொண்டாட்டங்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பே ரஜினி வீட்டில் தொடங்கி விட்டது.

மகள் திருமணத்தில் பங்கேற்பதற்காக தமிழக முதல்வர் பழனிசாமி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், நடிகர் கமல் உட்பட பல முக்கிய பிரபலங்களை நேரில் சந்தித்து பத்திரிக்கை வைத்து ரஜினி அழைப்பு விடுத்திருந்தார்.
இந்நிலையில், இன்று காலை 9 மணி முதல் 10.30 மணிக்குள் சென்னை எம்.ஆர்.சி. நகரில் உள்ள லீலா பேலஸ் ஓட்டலில் சவுந்தர்யா - விசாகன் திருமணம் நடைபெற்றது. ரஜினியின் மிக முக்கிய குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே இந்த திருமண விழாவில் கலந்து கொண்டனர்.

அந்தவகையில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேரில் சென்று மணமக்களை வாழ்த்தினார். அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, கடம்பூர் ராஜு, தங்கமணி ஆகியோர் அவருடன் சென்றிருந்தனர்.
அதுபோல் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, நடிகரும் மக்கள் நீதி மய்யக் கட்சித் தலைவருமான கமல், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோரும் திருமண விழாவில் கலந்துகொண்டனர்.

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி, திரையுலகைச் சேர்ந்த நடிகர், நடிகையர், இயக்குனர்கள் தயாரிப்பாளர்கள் உள்ளிட்ட பல முக்கிய பிரபலங்கள் திருமண விழாவில் கலந்துகொண்டனர். எளிமையாக நடத்த திட்டமிடப்பட்ட இந்த திருமணம், இவ்வளவு பிரமாண்டமாக நடைபெறும் என ரஜினி குடும்பத்தினரே எதிர்பார்க்கவில்லை.



Click it and Unblock the Notifications











