சுத்திப் போடுங்க சவுந்தர்யா.. உண்மையிலேயே ‘இது தான் ஆசிர்வாதம்’!
சென்னை: தன் கணவருடன் மகன் வேத் விளையாடும் புகைப்படம் ஒன்றை மகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார் ரஜினி மகள் சவுந்தர்யா.
நடிகர் ரஜினிகாந்தின் மகளும், கோச்சடையான், விஐபி 2 போன்ற படங்களை இயக்கியவருமான சவுந்தர்யாவிற்கும், விசாகனுக்கும் கடந்த மாதம் திருமணம் நடைபெற்றது. இருவருக்குமே இது இரண்டாவது திருமணம் ஆகும். சவுந்தர்யாவிற்கு முதல் திருமணம் மூலம் வேத் என்ற மகன் உள்ளார்.
கோலாகலமாக நடைபெற்ற சவுந்தர்யாவின் இரண்டாவது திருமணப் புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது.
சவுந்தர்யா மகன் தேவ்
அதிலும் குறிப்பாக சவுந்தர்யாவின் மருதாணி வைத்த கைகளை வேத் பார்ப்பது, மணமேடையில் சவுந்தர்யா மடியில் வேத் அமர்ந்திருப்பது போன்ற புகைப்படங்கள் உணர்ச்சிப் பூர்வமாக இருந்தது. சவுந்தர்யாவிற்கு திருமணம் முடிந்ததும் ரஜினி, லதா ரஜினி, ஐஸ்வர்யா தனுஷ் ஆகியோர் ஆனந்தக்கண்ணீர் விடும் புகைப்படமும் வைரலானது.

தேனிலவில் மகனின் நினைவு
தேனிலவு சென்ற போதும், மகன் வேத்-ஐ நினைத்துக் கொண்டிருப்பதாக சவுந்தர்யா தனது சமூகவலைதளப் பக்கத்தில் தெரிவித்திருந்தார். இந்நிலையில், இன்று புதிய புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார் சவுந்தர்யா.

மகிழ்ச்சியான விளையாட்டு
அந்தப் புகைப்படத்தில் விசாகனும், வேத்தும் மகிழ்ச்சியாக விளையாடுகின்றனர். இதனை சவுந்தர்யா, ‘இது தான் ஆசிர்வாதம்' எனக் குறிப்பிட்டு டிவிட்டரில் வெளியிட்டுள்ளார். இந்தப் புகைப்படத்திற்கு ரஜினி ரசிகர்கள் பலரும் மகிழ்ச்சியும், வாழ்த்துக்களும் தெரிவித்துள்ளனர்.

ரஜினி தான் காரணம்
அதில் ஒரு ரசிகர், "இந்த சந்தேகத்திற்கு முக்கிய காரணம் ரஜினி மட்டுமே. பெருமிதம் கொள்ளுங்கள் ரஜினியின் ஆசை மகள் என்று. வாழ்த்துக்கள் நீடுழி வாழ்க" என வாழ்த்தியுள்ளார். அதேபோல் பலரும் சவுந்தர்யாவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











