»   »  விஐபி 2 படத்தில் அனிருத்தை ஓரங்கட்டினோமா?: சவுந்தர்யா

விஐபி 2 படத்தில் அனிருத்தை ஓரங்கட்டினோமா?: சவுந்தர்யா

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: விஐபி 2 படத்திற்கு அனிருத்தை விட்டுவிட்டு ஷான் ரோல்டனை ஒப்பந்தம் செய்தது ஏன் என்று சவுந்தர்யா ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

விஐபி படத்திற்கு இசையமைத்த அனிருத் விஐபி 2 படத்தில் இல்லை. விஐபி 2 படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். விஐபி 2 படத்தில் அனிருத் இல்லாதது அவரது ரசிகர்களை அதிருப்தி அடைய வைத்துள்ளது.

இந்நிலையில் இது குறித்து விஐபி 2 இயக்குனர் சவுந்தர்யா ரஜினிகாந்த் கூறியதாவது,

அனிருத்

அனிருத்

அனிருத்தை ஓரங்கட்டவில்லை. அனி ஒரு திறமையான இசையமைப்பாளர். அவரை நினைத்து எங்கள் குடும்பமே பெருமைப்படுகிறது. விஐபி 2 படத்திற்கு ஷான் தான் சரி என்று நானும், தனுஷ் சாரும் நினைத்தோம்.

கஜோல்

கஜோல்

நான் கஜோலின் மிகப் பெரிய ரசிகை. நானும், டி சாரும் விஐபி 2 திரைக்கதை பற்றி விவாதித்தபோது வசுந்தரா கதாபாத்திரத்திற்கு கஜோல் மேடம் தான் சரி என்று எங்களுக்கு தோன்றியது.

மகன்

மகன்

ஷூட்டிங் இல்லாத நேரத்தில் நான் என் மகன் வேதுடன் நேரத்தை செலவிடுவேன். யாத்ரா மற்றும் லிங்காவுக்கு தங்களின் அப்பா தனுஷை படங்களில் பார்க்க மிகவும் பிடிக்கும்.

சவுந்தர்யா

சவுந்தர்யா

ரஜினி அரசியலுக்கு வருவது பற்றி சவுந்தர்யா ரஜினிகாந்திடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர் கூறியதாவது, எங்கள் குடும்பத்தில் எதுவாக இருந்தாலும் ஒன்றாக அமர்ந்து பேசுவோம். ஆனால் தந்தை மற்றும் அரசியல் பற்றிய கேள்விக்கு பதில் அளிக்க விரும்பவில்லை என்றார்.

அரசியல்

அரசியல்

கமல் அரசியலுக்கு வருவது பற்றி கேட்டதற்கு, கமல் சாரும், அப்பாவும் எப்பொழுதுமே நல்ல நண்பர்கள். அவர் எப்பொழுதும் நிம்மதியுடனும், மகிழ்ச்சியுடனும் இருக்கவே நாங்கள் விரும்புகிறோம் என்று சவுந்தர்யா தெரிவித்துள்ளார்.

English summary
Director Soundarya Rajinikanth said that she has not replaced Anirudh in VIP 2 starring Dhanush.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil