»   »  விபத்தில் இறந்த செளந்தர்யா 3 மாத கர்ப்பம்

விபத்தில் இறந்த செளந்தர்யா 3 மாத கர்ப்பம்

Subscribe to Oneindia Tamil

விமான விபத்தில் இறந்தபோது நடிகை செளந்தர்யா 3 மாத கர்ப்பிணியாக இருந்தது தெரிய வந்துள்ளது.

செளந்தர்யா கடந்த சனிக்கிழமை விமான விபத்தில் பலியானார். பாஜகவுக்கு பிரசாரம் செய்ய ஆந்திரா செல்லமுற்பட்டபோது இந்த விபத்து நிகழ்ந்தது.

அவர் கடந்த வருடம் ஏப்ரல் மாதம் தனது உறவினரான ஸ்ரீதரை திருமணம் செய்து கொண்டார். மூன்றுமாதங்களுக்கு முன் கருவுற்றார். கருவுற்ற நிலையில் படப்பிடிப்பிலும், பிரசாரத்திலும் பங்கேற்க வேண்டாம், உடல்நலனில் அக்கறை செலுத்துமாறு டாக்டர்களும், உறவினர்களும் கூறியுள்ளனர்.

அதை மீறித்தான் செளந்தர்யா பிரசாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். கருவுற்ற நிலையில் ஆந்திராவுக்கு காரில்பயணம் செய்வது உசிதமாக இருக்காது என்பதால்தான் விமான பயணத்தைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்செளந்தர்யா. இறுதியில் அந்த விமான பயணமே அவரது உயிருக்கு எமனாக அமைந்து விட்டது.

  • விமான விபத்தில் செளந்தர்யா பலி
Please Wait while comments are loading...