தளபதி 67 யும் தெலுங்கு படமா... எதிர்பார்ப்பை எகிற வைக்கும் அப்டேட்கள்
சென்னை : விஜய் தற்போது நடித்து வரும் பீஸ்ட் படத்தின் அப்டேட்டே இன்னும் முடியவில்லை, அதற்குள் விஜய்யின் அடுத்தடுத்த படங்கள் பற்றிய அறிவிப்புக்களும், அப்டேட்களும் வந்து கொண்டிருப்பதால் விஜய் ரசிகர்கள் செம கொண்டாட்டத்தில் இறங்கி உள்ளனர்.
விஜய்யின் அடுத்த படமாக உருவாக போகும் தளபதி 66 படத்தை தெலுங்கு டைரக்டர் வம்சி பைடிபள்ளி இயக்க போவது உறுதியாகி விட்டது. இந்த படத்தில் மிகப் பெரிய பட்ஜெட்டில் தில் ராஜு தயாரிக்க போகிறார். விஜய்க்கு தெலுங்கிலும் ரசிகர்கள் கூட்டம் இருப்பதால் இது நேரடி தெலுங்கு படமாகவே இயக்கப்பட உள்ளதாம். ஆனால் தமிழ் ரசிகர்களையும் ஏமாற்ற படக்குழு விரும்பவில்லையாம்.

விஜய்க்கு 120 கோடி சம்பளம்
தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் தயாராக உள்ள இந்த படத்திற்காக விஜய்க்கு 100 கோடிக்கும் அதிகமாக சம்பளம் பேசப்பட்டுள்ளதாம். இதன் மூலம் அதிக சம்பளம் பெறும் தென்னிந்திய நடிகர்கள் பட்டியலில் ரஜினியை பின்னுக்கு தள்ளி விஜய் முதலிடத்தை பிடிக்க உள்ளார். இது தான் லேட்டஸ்ட் ஹாட் டாக்காக இருந்து வருகிறது.

வசனம் எழுதும் ராஜு முருகன்
இந்த படத்தில் பிரபல தமிழ் பட டைரக்டர் ஒருவரும் இணைய உள்ளதாக லேட்டஸ்டாக மற்றொரு தகவல் வெளியாகி உள்ளது. குக்கூ, ஜோக்கர் படங்களை இயக்கிய டைரக்டர் ராஜு முருகன் தான் தளபதி 66 படத்தின் தமிழ் வெர்சனுக்கான வசனங்களை எழுத போகிறாராம். இதே போல் இந்த மெகா பட்ஜெட் படத்தில் தமிழ் சினிமா எடிட்டர் பிரவீன் கே.எல்.,யும் இணைய உள்ளாராம். இந்த படத்திற்கு இசையமைக்க தமனிடம் பேசப்பட்டு வருகிறதாம். அடுத்த சில வாரங்களில் தளபதி 66 படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கள் வெளியாக உள்ளனவாம்.

தளபதி 67 அப்டேட்டும் வந்தாச்சா
இதற்கிடையில் தளபதி 67 படம் பற்றிய அறிவிப்புக்களும் வெளியாக துவங்கி விட்டன. இந்த படமும் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் ஒரே நேரத்தில் எடுக்கப்பட உள்ளதாம். தெலுங்கில் சூப்பர் ஹிட்டான வைகுந்தபுரமுலோ, மகதீரா உள்ளிட்ட படங்களை தயாரித்த கீதா ஆர்ட்ஸ் நிறுவனம் தான் இந்த படத்தையும் தயாரிக்க உள்ளதாம். விஜய்க்காக ஆக்ஷன் கதை ஒன்றை இந்த நிறுவனம் தயார் செய்து வருகிறதாம்.

யாருப்பா டைரக்டர்
அதே சமயம் மற்றொரு தகவலாக தளபதி 67 படத்தை தடம் பட இயக்குனர் மகிழ்திருமேனி, மாஸ்டர் படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ், கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தை இயக்கிய தேசிங்கு பெரியசாமி இவர்களில் யாராவது இயக்குவார்கள் எனவும் கூறப்படுகிறது. தளபதி 67 படத்தில் அறிவிப்பு மாஸாக இருக்கும் என்று மட்டும் உறுதியாக சொல்கிறார்கள்.

செப்டம்பரில் ரஷ்யா பயணம்
தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் பீஸ்ட் படத்தின் மூன்றாம் கட்ட ஷுட்டிங் சென்னையில் நடந்து வருகிறது. இது இந்த வார இறுதியுடன் முடிவடைய உள்ளதாம். அதைத் தொடர்ந்து அடுத்த கட்ட ஷுட்டிங்கிற்காக செப்டம்பர் முதல் வாரத்தில் விஜய் உள்ளிட்ட பீஸ்ட் படக்குழுவினவர் ரஷ்யா புறப்பட்டு செல்ல உள்ளனர்.

விரைவில் அறிவிப்புக்கள்
அனிருத் இசையமைத்து வரும் பீஸ்ட் படத்தில் விஜய், பூஜா ஹெக்டே, யோகி பாபு, விடிவி கணேஷ், செல்வராகவன், ஷைடாம் சாகோ, அபர்னா தாஸ் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். பீஸ்ட் படத்தில் மூன்றாவது வில்லன் பற்றிய அறிவிப்பு இதுனரை வெளியிடப்படாமல் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது. இதனால் இனி வரும் வாரங்களில் பீஸ்ட் மற்றும் தளபதி 66 பற்றிய அடுத்தடுத்த அறிவிப்புக்கள் வெளியாக வாய்ப்புள்ளன.


Click it and Unblock the Notifications











