விஜய் ஃபேன்ஸ் ரெடியாகுங்க... பீஸ்ட் சர்ப்ரைஸ் வருதாம்...என்ன அப்டேட் தெரியுமா?

சென்னை : சோஷியல் மீடியாவில் தொடர்ந்து பீஸ்ட் அப்டேட் கேட்டு வரும் ரசிகர்களை குஷிப்படுத்துவதற்காக மிக முக்கியமான அப்டேட் விரைவில் வெளியிடப்பட உள்ளதாம். இதனால் இதை வேற லெவலில் கொண்டாட விஜய் ரசிகர்கள் இப்போதே தயாராகி வருகிறார்கள்.

டைரக்டர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள பீஸ்ட் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்தில் பூஜா ஹெக்டே, செல்வராகவன், அபர்னா தாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தின் ஃபஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் படத்தின் டைட்டிலுடன் கடந்த ஜுலை மாதம் விஜய்யின் பிறந்த நாளன்று வெளியிடப்பட்டது.

அரபிக்குத்துக்கு இத்தனை வ்யூவா

அரபிக்குத்துக்கு இத்தனை வ்யூவா

அதற்கு பிறகு எந்த அப்டேட்டும் இல்லாமல் படத்தின் ஒட்டுமொத்த ஷுட்டிங்கையும் முடித்து விட்டார்கள். ரசிகர்கள் தொடர்ந்து அப்டேட் கேட்டும், பலமுறை எதிர்பார்த்து ஏமாந்து போனதாலும் காதலர் தின ஸ்பெஷலாக பீஸ்ட் ஃபஸ்ட் சிங்கிளாக அரபிக்குத்து வீடியோ லிரிக் பாடல் வெளியிடப்பட்டது. சிவகார்த்திகேயன் எழுதிய, அனிருத் இசையத்து பாடிய இந்த பாடல் தாறுமாறாக ஹிட் அடித்து வருகிறது. இதுவரை 175 மில்லியன் பார்வைகளை கடந்து விட்டது.

பீஸ்ட் அப்டேட்டே இல்லையே

பீஸ்ட் அப்டேட்டே இல்லையே

ரசிகர்களை மட்டுமல்ல பிரபலங்களையும் அரபிக்குத்து பாடல் ஆட வைத்துள்ளது. இதனைத் தொடர்ந்து பீஸ்ட் டீசர் வெளியிட உள்ளதாகவும், பிறகு செகண்ட் சிங்கிள் வெளியிடப்பட உள்ளதாகவும் கூறப்பட்டது. அப்படி ஏதும் வெளியிடப்படாததால் ரசிகர்கள் தொடர்ந்து ரிலீஸ் தேதி பற்றிய அப்டேட் கேட்டு வந்தனர். ரசிகர்களை தாண்டி தற்போது பிரபலங்களும் பீஸ்ட் அப்டேட் கேட்க துவங்கி விட்டனர். இந்நிலையில் பீஸ்ட் ஆடியோ வெளியீட்டு விழா மார்ச் 20 ம் தேதி சென்னையில் மிக பிரம்மாண்டமாக நடத்தப்பட உள்ளதாக தகவல் வெளியானது.

என்னது ஆடியோ ரிலீஸ் இல்லையா

என்னது ஆடியோ ரிலீஸ் இல்லையா

கடந்த ஒரு வாரமாகவே பீஸ்ட் ஆடியோ வெளியீட்டு விழா எங்கு நடக்க உள்ளது என்பது பற்றி பல தகவல்கள் சோஷியல் மீடியாவில் பரவி வருகிறது. அதிகாரப்பூர்வ அறிவிப்பு எப்போது என ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கையில், ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளிப்பதாக, கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பீஸ்ட் ஆடியோ வெளியீட்டு விழா நடத்த வேண்டாம் என முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.

ஆஹா செம மேட்டரா இருக்கே

ஆஹா செம மேட்டரா இருக்கே

லேட்டஸ்ட் தகவலாக ஆடியோ வெளியீட்டு விழா இல்லாமல் நேரடியாக பீஸ்ட் ரிலீஸ் தேதியை விரைவில் அறிவிக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாம். ஏப்ரல் 13 ம் தேதி பீஸ்ட் ரிலீசாவது 99 சதவீதம் உறுதியாகி விட்டதாம். விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்க போகிறார்களாம். ரிலீஸ் தேதியுடன் இருக்கும் பீஸ்ட் போஸ்டர் ஒன்றை உருவாக்கி ரசிகர்கள், சோஷியல் மீடியாவில் பரவ விட்டுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X